மாணவர் அணியை பலப்படுத்தும் திமுக.!! தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகிகள்.!! முழு விபரம் இதோ !!
திமுக மாணவர் அணி மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, பாகக் கழக மாணவர் அணியின் நிர்வாக கட்டமைப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி, கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட, பாகம் வரையிலான நிர்வாக கட்டமைப்பு கீழ்காணும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
மாவட்ட அமைப்பு :
ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் என்று நியமிக்கப்பட உள்ளனர். அதில், பெண் துணை அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 40 வயதிற்குட்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. (ஏதாவது பட்டப் படிப்பு (அ) பட்டயப் படிப்பு)
மாநகர அமைப்பு :
ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் என்று நியமிக்கப்பட உள்ளனர். அதில், பெண் துணை அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்குட்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. (ஏதாவது பட்டப் படிப்பு (அ) பட்டயப் படிப்பு)
இதையும் படிங்க..ஜனவரி 4ம் தேதி பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு !
நகர, பகுதி, ஒன்றிய, பேரூர் அமைப்பு :
ஒரு அமைப்பாளர், ஐந்து துணை அமைப்பாளர்கள் என்று நியமிக்கப்பட உள்ளனர். அதில், பெண் துணை அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 30 வயதிற்குட்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டுமெனவும், அல்லது தற்போது கல்லூரியில் பயிலுக்கூடிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. (ஏதாவது பட்டப் படிப்பு (அ) பட்டயப் படிப்பு)
வட்ட, பாக அமைப்பு :
ஒரு அமைப்பாளர், மூன்று துணை அமைப்பாளர்கள் என்று நியமிக்கப்பட உள்ளனர். அதில், பெண் துணை அமைப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். பொறுப்புக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயதிற்குட்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டுமெனவும், அல்லது தற்போது கல்லூரியில் பயிலுக்கூடிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. (ஏதாவது பட்டப் படிப்பு (அ) பட்டயப் படிப்பு)
மாவட்ட, மாநகர மாணவர் அணி பொறுப்பிற்கு விண்ணப்பித்தவர்களிடம், அந்தந்த மாவட்டக் கழக செயலாளர் முன்னிலையில், மாணவர் அணிச் செயலாளர் மற்றும் மாநில மாணவர் அணி நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி, அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் கழக அளவிலான மாணவர் அணி பொறுப்பிற்கு விண்ணப்பித்தவர்களிடம், அந்தந்த மாவட்டக் கழக செயலாளர் முன்னிலையில், மண்டல பொறுப்பேற்கும் மாநில நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி, அமைப்பாளர்-துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
இதையும் படிங்க..அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாடலாம்.. உதயநிதி ஸ்டாலின் நடிக்க கூடாதா ? விஷால் கொடுத்த பதிலடி !
கழகத்திலுள்ள 72 மாவட்டங்களும் மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு, கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின், மாவட்டக் கழக செயலாளர்களுடன் உடனடியாக தொடர்பு கொண்டு, மாவட்ட, மாநகர அளவிலான அமைப்பாளர்-துணை அமைப்பாளர்களை நியமிப்பது தொடர்பாக, நேர்காணல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மாவட்ட, மாநகர அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் பொறுப்பிற்கு வர விரும்புகிறவர்கள், தலைமைக் கழக மாணவர் அணி வெளியிட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, அத்துடன் பட்டப் படிப்பு அல்லது பட்டயப் படிப்பிற்கான சான்றிதழையும், வயதிற்கான சான்றிதழையும், அவர்கள் இதுவரையில் கழகப் பணியாற்றியிருக்கக்கூடிய விவரத்தினையும் இணைத்து, வரும் 17.12.2022 தேதிக்குள் மாவட்டக் கழக செயலாளரிடம் வழங்கிட வேண்டும்.
மனுவின் மற்றொரு நகலை, செயலாளர், தி.மு.க. மாணவர் அணி, “அண்ணா அறிவலாயம்”, எண்.369, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 17 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பூர்த்தி செய்த படிவம் மற்றும் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து, “dmkstudentwing1950@gmail.com” என்ற கழக மாணவர் அணியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்... நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்