Asianet News TamilAsianet News Tamil

பாஜக செய்த சாதனைகளை ஆளுநர் சொல்ல முடியுமா.? ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக சீறிய முரசொலி!!

தமிழக அரசியல் களத்தில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கும்,  தமிழக அரசுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது.

DMK Murasoli criticized Tamil Nadu Governor RN Ravi
Author
First Published Jan 7, 2023, 4:44 PM IST

திமுகவின் நாளேடான முரசொலியில் ஆளுநர் ஆர்.என் ரவியை விமர்சித்து கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘ஐம்பது ஆண்டுகளாக திராவிட ஆட்சிகளால் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் சொல்லி இருக்கிறார்.

அவருக்கு ‘தமிழ்நாடு’ பற்றி தொடர்ச்சியாக விளக்கம் அளிக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. தனது கையில் இருக்கும் ஆட்சி அதிகாரத்தை வைத்து திராவிட முன்னேற்றக் கழகம் செய்த மலையளவுச் சாதனைகள் இருக்கட்டும்; ஒன்றிய அளவில் கூட்டணி அமைச்சரவையில் பங்கெடுத்த கழகமானது, தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டால் அதுவே பக்கம்பக்கமாக பட்டியலிடத் தக்கது ஆகும்.

DMK Murasoli criticized Tamil Nadu Governor RN Ravi

பிரதமராக வி.பி,சிங், வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால், மன்மோகன் சிங் ஆகியோர் இருந்தபோதெல்லாம் அந்தக் கூட்டணியில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. அப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்குச் செய்யப்பட்ட சாதனைகள் பலப்பல. இந்திய அரசு செலவு செய்த திட்டச் செலவில் 11 விழுக்காட்டை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தோம். மிக முக்கியமான 69 திட்டங்களைக் கொண்டுவந்து நிறைவேற்றிக் காட்டினோம்.

இரண்டாயிரம் ஆண்டு இலக்கியப் பெருமை கொண்ட தமிழ்மொழியைச் செம்மொழியாக்கும் பெருங்கனவு 100 ஆண்டுகளாக நம் தமிழறிஞர்களுக்கு இருந்தது. செம்மொழித் தகுதியை தமிழுக்குப் பெற்றுத் தந்தோம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை அமைத்தோம். கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் 56 ஆயிரத்து 664 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் திட்டப்பணிகள் செய்யப்பட்டன.

இதையும் படிங்க..ஜில்லா முதல்வர்.. மெயின்ரோடு புகழ்.! கண்ட்ரோல் இல்லாதவர்கள் - ஜெயக்குமாருக்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி!

ஒரகடத்தில் 470 கோடி ரூபாய் முதலீட்டில் தேசிய மோட்டார் வாகனச் சோதனை மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்தது. 1553 கோடி ரூபாய் செலவில் சேலம் உருட்டாலை சர்வதேச அளவுக்கு உயர்த்தப்பட்டு, புதிய குளிர் உருட்டாலை உருவாக்கம் . தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம். சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம் . 120 கோடி ரூபாய் செலவில் சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மேம்பாடு செய்யப்பட்டது.

1650 கோடி ரூபாய் செலவில் சென்னை துறைமுகம் – - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைக்கான துவக்கம் . 2427 கோடி ரூபாய் செலவில் சேது சமுத்திரத் திட்டப்பணிகள் தொடக்கம் . நெசவுத் தொழிலுக்கு இருந்த சென்வாட் வரி நீக்கம் என சாதனைகளை கூறப்பட்டுள்ளது.

இப்படி கடந்த எட்டாண்டு காலத்தில் பா.ஜ.க. ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட சாதனைகளை ஆளுநரோ, பா.ஜ.க.வினரோ பட்டியலிட முடியுமா? இந்தித் திணிப்பு,  சமஸ்கிருதத் திணிப்பு, தமிழ் புறக்கணிப்பு,நீட் கொடுமை, மூன்று வேளாண் சட்டங்களின் மூலமாக விவசாயிகளின் வாழ்க்கை பறிப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தனைக்கும் மேலாக ‘எய்ம்ஸ்’ நாடகங்கள். குறைந்தபட்சம் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டடமாவது கட்டித் தந்துவிட்டார்களா என்றால் இல்லை. ஆதரிப்பதாக இருந்தாலும் எதிர்ப்பதாக இருந்தாலும் இரண்டிலும் உறுதியாக இருப்பவர் முதல்வர் கலைஞர்” என்றார் பிரதமர் இந்திரா.

DMK Murasoli criticized Tamil Nadu Governor RN Ravi

இதையும் படிங்க..தமிழ்நாட்டை காப்பாற்ற ராமேஸ்வரத்தில் மோடி.. கோவையில் அமித்ஷா.! 2024 தேர்தல் - அர்ஜுன் சம்பத் அதிரடி

“பேரறிஞர் அண்ணா உருவாக்கிய உயர்ந்த மரபுகளைக் கையாண்டு வெற்றி பெற்றவர் கலைஞர்” என்றார் பிரதமர் சரண்சிங்! “கொள்கைக்காக, இலட்சியத்துக்காக கட்சியையும் ஆட்சியையும் நடத்தியவர் கலைஞர்” என்றார் பிரதமர் வி.பி.சிங்! “டெல்லியில் நான் பிரதமராக இருந்தாலும், சென்னைதான் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது” என்று சொன்னார் பிரதமர் தேவகவுடா.

“நலிந்த பிரிவு மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்காக கலைஞர் போராடினார்” என்றார் பிரதமர் வாஜ்பாய்! “தனது திறமையான நிர்வாகத்தால் தமிழகத்தை முன்னேற்றியவர் கலைஞர்” என்றார் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி. “தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் கொள்கைக்கு வலிமை சேர்க்கும் விதமாக ஆட்சி நடத்தினார்” என்று பாராட்டினார் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன்.

இப்படி இந்தியாவின் பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள் அனைவரையும் தமிழகத்தைநோக்கி ஈர்த்த கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம். ‘உறவுக்குக் கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்று சொல்லி அதன்படி நடந்துகொண்ட ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இவை எல்லாம் ஆளுநர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்தத் தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தபிறகு, இந்த மாநிலத்துக்கு, ஒன்றிய அரசிடம் பேசி என்ன திட்டம் கொண்டு வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..2024 நாடாளுமன்ற தேர்தல்; அதிமுக - பாஜக கூட்டணி உறுதியா? அண்ணாமலை கொடுத்த ஷாக் அப்டேட் !!

Follow Us:
Download App:
  • android
  • ios