ஜில்லா முதல்வர்.. மெயின்ரோடு புகழ்.! கண்ட்ரோல் இல்லாதவர்கள் - ஜெயக்குமாருக்கு சவால் விட்ட செந்தில் பாலாஜி!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கும் தொடர்ந்து மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

Minister senthil balaji challenge to admk jayakumar

இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் கரூர் மாவட்டத்தில் திமுக வின் அவதூறுகள் குறித்து டிஜிபியிடம் புகார் மனு அளித்ததோடு அங்கிருந்த செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், விடியா ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில் கொலை கொள்ளை அதிகரித்ததோடு பாலியல் சீண்டர்களும் பாலியல் தொல்லைகளும் பெண்களுக்கு அதிக அளவில் அரங்கேரி வருகிறது. அதேபோல பல மாவட்டங்கள் முதல்வரின் கண்ட்ரோலை விட்டு அவுட் ஆப் கண்ட்ரோலில் தான் உள்ளது.

Minister senthil balaji challenge to admk jayakumar

கரூர் மாவட்டமானது ஐஜி அல்லது டிஜிபி கண்ட்ரோலில் இல்லாமல் முதல்வரின் கண்காணிப்பிலும் இல்லாமல் செந்தில் பாலாஜியின் கோட்டையாக இருந்து வருகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் முதல் கட்டமாக ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நடக்கும் பொழுது அதிமுக நிர்வாகிகளின் கார்களின் மீது திமுக ரவுடிகளை ஏவி விட்டு ஆசிட் வீச்சு போன்றவற்றை நடத்தி கலவரம் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..சர்ச்சைகளின் நாயகன்.. ஜெயலலிதா பற்றிய அவதூறு.. ஈரோடு தேர்தல் அப்டேட்! டிடிவி தினகரன் அதிரடி பேட்டி

தமிழ்நாட்டிற்கு என்று தனித்தன்மை உண்டு. தமிழ்நாடு என்றுதான் அழைக்கப்பட வேண்டுமென 1963லேயே குரல் கொடுத்தவர் அண்ணா. அவரது வழியில் வந்தவர்கள் நாங்கள் என்பதால் என்பதால் தமிழ்நாடு என்ற பெயரையே ஆதரிக்கிறோம். தமிழ்நாடு என்ற பெயரே பொருத்தமான பெயராக இருக்கும். அதற்கு பெயர்மாற்றம் மூலம் கிடைக்கப் போகிறது என்று நேரு மற்றும் சில அமைச்சர்கள் கேள்வி கேட்டார்கள்.

அதற்கு அண்ணா, கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் என்பதை ராஜ்ய சபா என்று மாற்றியதன் மூலமாகவும், நாடாளுமன்றம் என்பதை லோக் சபா என்று மாற்றிதன் மூலம் என்ன கிடைத்ததோ, அதே அனுகூலம் தான் எங்களுக்கு கிடைக்கப் போகிறது என்று பதிலளித்தார். தமிழ்நாடு என்ற பெயர் நமது வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பெயராகும். இதன்மூலம் நமது மாநிலத்திற்கு தனித்தன்மை இருக்கிறது. தமிழ்நாடு என்றே அழைக்க வேண்டும் என்று கூறினார்.

தற்போது ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கரூர் மாவட்டத்தில் அனைத்துத் தேர்தல்களிலும் மக்களால் புறக்கணிக்கப்படும் அதிமுக, எப்படியாவது செய்திகளில் இடம் பெற்றுவிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

‘கரூரில் கண்ட்ரோல் இல்லை’ என ‘மெயின்ரோடு’ என்று எல்லோராலும் புகழப்படுகிற திரு.ஜெயக்குமார் பேசியிருக்கிறார். மாண்புமிகு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் அவர்களின் நல்லாட்சியில் தமிழ்நாடு முழுக்க சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டு அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. தனக்குதானே ‘கண்ட்ரோல் இல்லாதவர்கள்’ சொல்வதையெல்லாம் மக்கள் நம்புவதில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க..11 நாட்கள்.. 13,560 கிமீ தூரம்.. உணவின்றி பறந்து கின்னஸ் சாதனை செய்த பறவை - எங்கு தெரியுமா?

இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios