சர்ச்சைகளின் நாயகன்.. ஜெயலலிதா பற்றிய அவதூறு.. ஈரோடு தேர்தல் அப்டேட்! டிடிவி தினகரன் அதிரடி பேட்டி
தமிழக ஆளுநர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக திகழ்ந்து வருகிறார். - டிடிவி தினகரன் பேட்டி.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு செவிலியர்கள் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க..11 நாட்கள்.. 13,560 கிமீ தூரம்.. உணவின்றி பறந்து கின்னஸ் சாதனை செய்த பறவை - எங்கு தெரியுமா?
தமிழ்நாடு விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி சர்ச்சை நாயகனாக உருவெடுத்து இருக்கிறார். அவருடைய பேச்சு ஆளுநர் பதவிக்கு அழகல்ல. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியது தவறு என்று அவரே உணரும் காலம் விரைவில் வரும்.
இதையும் படிங்க..ஆளுநர் தான் பொறுப்பு.. திமுக 1,000 தரவில்லை? 2024 கூட்டணி யாருடன்? சஸ்பென்ஸை உடைத்த அன்புமணி ராமதாஸ்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் காவல்துறை கைது செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்ட பின்னர் அங்கு போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
இதையும் படிங்க..நியூ இயரில் மாமியாருடன் ஓட்டம் பிடித்த மருமகன்.. போலீசிடம் கதறிய மாமனார்.. பரபரப்பு சம்பவம்