அடித்து சொல்றேன் ரூ.12,000க்கு கழிவறையை கட்ட முடியாது... அண்ணாமலை பேசியது குறித்து திமுக எம்.பி. விமர்சனம்!!
12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 55 லட்சத்து 11 ஆயிரத்து 791 கழிவறைகளில் 95% கூட செயல்படும் நிலையில் இல்லை என்பதை அடித்து கூற முடியும் என்று திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
12 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட 55 லட்சத்து 11 ஆயிரத்து 791 கழிவறைகளில் 95% கூட செயல்படும் நிலையில் இல்லை என்பதை அடித்து கூற முடியும் என்று திமுக எம்பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்கா சென்றுள்ள அண்ணாமலை அங்கிருந்து, தமிழக பாஜக ஐ.டி.விங் அணி ஏற்பாடு செய்த டிவிட்டர் தளத்தில், மாற்றத்தை நோக்கி தமிழகம்' என்ற தலைப்பில் பேசினார். அப்போது, தமிழகத்தில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 55 லட்சம் லாய்லெட்டுகள் ஸ்வெச் பாரத் திட்டம் மூலம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீரில் நேருவின் பங்கு என்ன ? பாஜக Vs காங்கிரஸ்.. ட்விட்டரில் அனல் பறந்த மோதல்.!
இதன் மூலம் கிராம மக்கள் தங்களுக்கு கௌரவம் கிடைத்துள்ளது என்று தெரிவித்திருந்தார். மேலும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில் அண்ணாமலை பேசியது குறித்து திமுக எம்பி செந்தில்குமார் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பதிவில், மத்திய அரசின் கீழ் கட்டப்பட்டுள்ள 55,11,791 கழிவறைகள் ரூ.12,000 என்கிற விகிதத்தில் கட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மத்திய அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்!!
ரூ12,000 மதிப்பில் கட்டப்பட்ட 55,11,791 கழிவறைகளில் 95% கூட செயல்படும் நிலையில் இல்லை என்பதை என்னால் அடித்துக் கூற முடியும் காரணம், ரூ12,000 கொண்டு கழிவறைகளைக் கட்ட முடியாது. நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரிடமும் நேரடியாக இதனை நான் தெரிவித்தேன். மோசமான திட்டமிடலால், தமிழ்நாட்டில் மட்டும் ரூ66 கோடி வீணாகியிருக்கிறது. இது ஒரு தோல்வியடைந்த திட்டம். இந்த நிதியை மக்கள் நலனுக்கான எத்தனை திட்டங்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என எண்ணிப்பாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.