வண்ணாரப்பேட்டை படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் திரௌபதி. இதில், நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அண்ணன் ரிச்சர்ட் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படம் அண்மையில் வெளியாகி செம வைரலானது. இந்த படம் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். படத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது.

Image

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரண்டாம் முறையாக திரௌபதி திரைப்படத்தை பார்த்துள்ளார். நேற்று மாலையில் சென்னை சத்யம் திரையரங்கில் பாமக நிர்வாகிகளோடு சென்று ராமதாஸ் படம் பார்த்துள்ளார். இதற்கு முன்பாக சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழக வளாகத்தில் திரௌபதி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது குடும்பத்துடன் பார்வையிட்டிருந்தார்.

'பெண்ணுரிமை பேசும் திரௌபதி'..! இரண்டு முறை பார்த்து உள்ளம் குளிர்ந்த ராமதாஸ்..!

 

இந்தநிலையில் தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் திரைப்படம் பார்த்த ராமதாஸை நக்கல் செய்யும் விதமாக ட்வீட் செய்துள்ளார். அதில், "1stகாட்சி-23 பேர் 2nd காட்சி-5 பேர் உடன் 3rd காட்சி-நீங்கள் மட்டுமா ஐயா? 'நிர்வாகிகள்/கட்சியினருடன் பார்த்தேன்'  என்று பதிவிட்டுளிர்கள் நம்ம கட்சியில் 5-10 பேர் தான் உள்ளார்களா. எல்லாம் நம்பிக்கை இழந்து போய்விட்டார்ககளா இல்ல இன்னும்மும் பூத் ல இருக்காங்களா" என்று பதிவிட்டுள்ளார்.