வழக்கு விசாரணையில் தலையிட முடியாது.. திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்.!
கடந்த 2012-2013ம் நிதியாண்டிற்கான வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்ததோடு, வருமான வரியையும் கால தாமதமாக கட்டியுள்ளார் எனக்கூறி வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
வருமானவரி வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் 2019 நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுததியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில், கடந்த 2012-2013ம் நிதியாண்டிற்கான வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்ததோடு, வருமான வரியையும் கால தாமதமாக கட்டியுள்ளார் எனக்கூறி வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இதையும் படிங்க;- அடுத்து வரும் ஓராண்டுகாலம் நமக்கு மிகவும் முக்கியமானது! தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது!முதல்வர் ஸ்டாலின்
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி 2017ம் ஆண்டு கதிர் ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கும், வரி செலுத்துவதற்கும் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக வழக்கு தொடர முடியாது என்று மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சட்டப்படி தாமதமாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தாலோ, தாமதமாக வரி செலுத்தினாலோ அபராதம் விதிக்க வருமான வரித்துறைக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், வருமான வரித்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் கதிர் ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையும் படிங்க;- முதல்வர் ஸ்டாலின் இதை செய்யாவிட்டால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - வானதி சீனிவாசன்
தாமதமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பும் வரை, வருமான வரி செலுத்தவில்லை என்பதால் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அதற்கு வருமான வரித்துறைக்கு அதிகாரம் இருப்பதாகவும் வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீதான வருமான வரி வழக்கை ரத்து செய்ய முடியாது என கூறி அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.