Asianet News TamilAsianet News Tamil

“தவிக்கும் விவசாயிகள்.. திமுகவினர் மௌனம்..” திமுகவை டிடிவி தினகரன் ஆவேசம் !

‘நெல் கொள்முதல் அரசின் சார்பில் தொடர்ந்து நடைபெற வேண்டும், தனியாரிடம் இருக்கக்கூடாது, குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்’ என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

DMK is silent on the issue of farmers speech in ammk Ttv Dhinarkaran
Author
First Published Aug 1, 2022, 2:39 PM IST

காவிரி டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக குறுவை, சம்பா, தாளடி என முப்போகமும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது . குறுவை நெல் அறுவடை செய்தால் அதை வழக்கமாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் தான் புதிய விலைக்கு கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டு மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பணியை முன்கூட்டியே விவசாயிகள் தொடங்கியுள்ளது.

எனவே கொள்முதலையும் முன்கூட்டியே செப்டம்பர் 1ஆம் தேதி திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக தமிழக முதல்வரும், பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக செப்டம்பர் 1-ஆம் தேதி கொள்முதல் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இதற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

DMK is silent on the issue of farmers speech in ammk Ttv Dhinarkaran

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

இந்த நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், 'நெல் கொள்முதல் அரசின் சார்பில் தொடர்ந்து நடைபெற வேண்டும், தனியாரிடம் இருக்கக்கூடாது, குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும், கரும்புக்கு மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்க ஏதுவாக பங்கிட்டு முறை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினார்.

இதுகுறித்து தற்போது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டர் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழகத்தில் குறுவை சாகுபடிக்கான பயிர்க்காப்பீடு செய்ய முடியாமல் இரண்டாவது ஆண்டாக விவசாயிகள் தவிப்பதற்கு திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும். உரிய காலத்திற்குள் காப்பீட்டு நிறுவனம் பற்றிய விவரங்களை அறிவிக்காமல் திமுக அரசு மௌனம் காப்பதன் அர்த்தம் என்ன ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. 1 பாட்டில் வாங்கினால், 2 பாட்டில் சரக்கு இலவசம்.! அதிரடி ஆஃபர்

மேலும், நாளொரு வேஷம் போட்டு, வெற்று விளம்பரங்களிலேயே ஆட்சி நடத்தும் திமுகவினருக்கு விவசாயிகளைப் பற்றி கவலைப்பட நேரமில்லாமல் போனது ஏன் ? உடனடியாக முதலமைச்சர் திரு. ஸ்டாலின், விவசாயப் பயிர்க்காப்பீட்டு பிரச்னை குறித்து மத்திய அரசோடு பேசி, விவசாயிகளுக்கு பாதிப்பில்லாத வகையில் உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

மேலும் செய்திகளுக்கு..நீங்க யார் பக்கம்? எடப்பாடி Vs ஓபிஎஸ்.. சசிகலா சொன்ன அந்த பேர்.. அதிர்ச்சியில் நிர்வாகிகள் !

Follow Us:
Download App:
  • android
  • ios