பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை பற்றி பேச எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு தகுதி இல்லை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை பற்றி பேச எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு தகுதி இல்லை என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 544 தொகுதியிலும் நிற்க தகுதி வாய்ந்தவர் பிரதமர் மோடி மட்டுமே. அவர் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால் மகிழ்ச்சி அடைவேன் .பிரதமர் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து மத்திய தலைமை எந்த முடிவும் எடுக்கவில்லை. மனிதனாக இருக்கவே தகுதி இல்லாத எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்திற்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை பற்றி பேச தகுதி இல்லை.
இதையும் படிங்க: இப்போதாவது ஞானம் வந்ததே.. காயத்ரி ரகுராமுக்கு அட்வைஸ் கொடுத்த திருமாவளவன் - ட்விஸ்ட்டா இருக்கே!
திமுக தலைவராக இருக்க மு.க.ஸ்டாலினுக்கு தகுதி உள்ளதா என்பதை பற்றி எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விவாதிக்க வேண்டும். சுய மரியாதை இல்லாதவர்கள் உள்ள கட்சி திமுக. சிதம்பரம் நடராஜர் கோவிலை அரசு கையக்கப்படுத்தும் எண்ணம் இல்லை என அமைச்சர் சேகர் பாபு கூறியிருப்பது ஆடு நனைகிறது என நரி கவலைப்பட்ட கதையாக உள்ளது. ஹிந்து கோவில்களில் தங்கமே இருக்க கூடாது என்ற நோக்கில் இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: செ** வீடியோவை வெளியிடப்போவதாக அண்ணாமலை கூறியுள்ளார்... எந்த தலைவர் அப்படி சொல்வார்? காயத்ரி ரகுராம் காட்டம்!!
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பணத்தை வைத்து குளத்தூரில் கல்லூரி கட்டி வருவது நீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் உள்ளது. கோவில் நிதியை ஆன்மீகம் அல்லாத தேவைகளுக்கு பயன்படுத்த கூடாது என நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. பொங்கலூர் பழனிச்சாமி கல்லூரி வளாகத்திற்குள் சிதம்பரம் கோவில் வில்வ பூஜைக்காக எழுதி வைக்கப்பட்ட 9 ஏக்கர் நிலம் ஏன் இன்னும் மீட்கப்படவில்லை. தான் ஜெயிலுக்கு போவதை மறைக்க வேண்டும் என்பதற்காக ரபேல் வாட்ச் பற்றி செந்தில் பாலாஜி பேசி வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
