Asianet News TamilAsianet News Tamil

சென்னை வெள்ளத்தை தமிழக அரசு கவனக்குறைவாக கையாண்டுள்ளது - நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

சென்னை பெருவெள்ளத்தை தமிழக அரசு கவன குறைவாக கையாண்டுள்ளதாக பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

dmk government was handling the michaung storm carelessly says bjp mla nainar nagendran vel
Author
First Published Dec 5, 2023, 3:45 PM IST

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 30 லட்சம் மதிப்பீட்டில் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவரும், நெல்லை சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் ராஜு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதி மக்கள் அனைவரும் வீட்டில் ஒருவராக என்னை நினைத்து ஆதரவு அளித்து வருகிறார்கள். சென்னை பெருவெள்ளம் 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்ததாக கூறினார்கள். எல்லாம் பணிகள் தயாராக உள்ளது என கூறினார்கள். சென்னை மழை வெள்ளத்தை தமிழக அரசு கவனக்குறைவாக கையாண்டுள்ளது. மழையை அரசியலாக்க விரும்பவில்லை. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

4 ஆயிரம் கோடி திட்டத்தில் குறைபாடு இருப்பதாக நான் கருதுகிறேன். தவறு செய்திருந்தால் அமலாக்கத்துறை, ராணுவம், நீதிபதி யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கலாம். அமலாக்கத்துறை மீது திட்டமிட்டு நடவடிக்கை எடுத்ததாக கருதுகிறேன். அமலாக்கத்துறை தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் யார் யார் பேர் பட்டியல் உள்ளது என எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செயல்பட்டிருக்கலாம். அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றது உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுத்ததில் தவறில்லை. பணத்தை வைத்து ஏன் எடுத்திருக்கக் கூடாது என எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. அமலாக்கத்  துறை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள் என்றால் நியாயம். ஆனால் இடைத்தரகர்கள்  என்று கூறுவதை சபாநாயகர் விளக்க வேண்டும். 

குடித்துவிட்டு சண்டையிட்ட கணவனை கள்ளக்காதலனை ஏவி கொன்று புதைத்த மனைவி; திருப்பத்தூரில் பரபரப்பு

இனிமேல் தேர்தல் காலத்தில் கருத்து கணிப்புகள் செல்லாது என்பதை இந்த தேர்தல் களம் காட்டுகிறது. 1998ல் பிஜேபி கட்சியை சேர்க்க மாட்டார்கள் என கூறினார்கள். ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் எங்களை சேர்த்துக் கொண்டார்கள். சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநிலங்களில் ஜெயிக்க வாய்ப்பில்லை என கூறினார்கள். ஆனால் இப்போது வெற்றி பெற்று இருக்கிறோம். தெலங்கானா மாநிலத்தில் 15 சதவீதம் வாக்குகள் பெற்றிருக்கிறோம். அடுத்த முறை கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இந்தியா கூட்டணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது? 

அகில இந்திய பாராளுமன்ற தேர்தல் குழு எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவு செய்வார்கள். பாஜக உடனான கூட்டணியில் தமிழகத்தில் இருந்தவர்கள் இப்பொழுது நாங்கள் இல்லை என்று சொல்வதற்கு காரணம் அழைத்துப் பேச வேண்டும் என்று நோக்கத்திற்காக தான். தமிழ்நாட்டில் தெலங்கானாவில் பிஜேபி இல்லை. ஆனால் இந்தியாவில் பிஜேபி தான் உள்ளது. மத்தியில் இன்றும் பிஜேபி தான், நாளையும் பிஜேபி தான், எதிர்காலமும் பிஜேபி தான். 

உடுமலையில் முதல்முறையாக நடத்தப்பட்ட ரோபோ கண்காட்சி; வியந்து பார்த்த பள்ளி மாணவர்கள்

கட்சி மாறினாலும் ஜெயலலிதா அவர்களை நினைவில் கொண்டு தான் இன்று சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறேன். வாழ்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களை மறக்க முடியாது. ஜெயலலிதா இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். 41 வயதிலேயே அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார்.  ஐந்து முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் கொடுத்த அவரை எப்படி என்னால் மறக்க முடியும். கட்சி மாறினாலும் இன்றளவும் அவருடைய கொள்கை, வழிகாட்டுதலின்படியே செயல்பட்டு வருகிறேன் என தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios