Asianet News TamilAsianet News Tamil

குடித்துவிட்டு சண்டையிட்ட கணவனை கள்ளக்காதலனை ஏவி கொன்று புதைத்த மனைவி; திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து குடித்துவிட்டு சண்டையிட்டு வந்த கணவனை கள்ளக்காதலனை ஏவிவிட்டு மனைவியே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Man killed by his friend in tirupattur district vel
Author
First Published Dec 5, 2023, 11:12 AM IST

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா அருகே உள்ளது பலக்ல்பாவி. முருகன் கோவில் பகுதியில் உள்ள மலை அடிவார பகுதியில் கடந்த 21ம் தேதி ஆடு மேய்க்க சென்றவர்கள், குழி ஒன்றில் அரைகுறையாக மூடப்பட்டுள்ள பள்ளத்தில் இருந்து துர்நாற்றம் வீசி ஈக்கள் மொய்ப்பதை கண்டு அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அருகில் இருந்தவர்கள் அங்கு வந்து பார்த்தபோது மனித கால்கள் மட்டும் தெரிந்த நிலையில் பிணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

உடனடியாக திம்மாம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் நாட்றம்பள்ளி தாசில்தாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் தோண்டி பார்த்த போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் உடலில் துணி இல்லாமல் புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தொடர்ந்து உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். இருந்தபோதிலும் 10 நாட்கள் கடந்தும் அவரை அடையாளம் காண முடியாத நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்துள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 1ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மல்லகுண்டா அடுத்த சுண்ணாம்பு காரகொள்ளை பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தனது மகன் விஜயகுமார் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்து தருமாறு புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்தது. புகாரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் கடந்த 21ம் தேதி கொன்று புதைக்கப்பட்ட நபர் ராஜாவின் மகன் விஜயகுமார் (வயது 29) என்பது அவர் காட்டிய அடையாளங்களை கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 

உடுமலையில் முதல்முறையாக நடத்தப்பட்ட ரோபோ கண்காட்சி; வியந்து பார்த்த பள்ளி மாணவர்கள்

விஜயகுமார் மலேசியாவில் வேலைக்கு சென்று ஐந்து மாதம் பிறகு வீடு திரும்பியதாகவும், இரண்டு மாதங்களாக சொந்த ஊரில் இருந்து வேலை செய்து வந்ததாகவும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவரது மனைவி வினிதாவிடம் (25) அடிக்கடி விஜயகுமார் சண்டையிட்டு வந்ததும், இந்த நிலையில் இவர்களுக்கு 11 மாத கைக்குழந்தை உள்ள நிலையில் கடந்த தீபாவளி அன்று கணவனுடன் சண்டை இட்டு அவரது தாய் வீடான ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இறந்து போன விஜயகுமாரின் செல்போன் அழைப்புகளை கண்காணித்து விசாரணையை தீவிர படுத்திய போது, அந்த நம்பர் அவருடைய நண்பரான திருப்பத்தூர் அடுத்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ராகவேந்திரனிடம் (24) இருந்ததும் தெரியவந்தது. மேலும் இறந்து போன விஜயகுமாரின் மனைவி வினிதா காவல்துறையினர் தீவிர விசாரணையில், விஜயகுமாரின் நண்பர் ராகவேந்திரன் இடம் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.

பள்ளியில் வழங்கிய சத்து மாத்திரையை மொத்தமாக சாப்பிட்ட மாணவன் பலி; சக மாணவர்கள் கதறல்

இந்த நிலையில் கடந்த 15ம் தேதி ராகவேந்திரனும், அவரது மனைவி வினிதாவும் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி அவரது கணவர் அடிக்கடி தொந்தரவு செய்து வருவதாகவும் அவரிடம் கூறியதாக தெரிகிறது. கடந்த 19ஆம் தேதி அன்று ராகவேந்திரன் விஜயகுமாருக்கு போன் செய்து தனியாக வரவழைத்து அவருக்கு மது பாட்டில்களை வாங்கி கொடுத்து கொலை செய்து மண்ணில் புதைத்து விட்டு தலைமறைவானதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ராகவேந்திரனை பிடித்த காவல்துறையினர் கொலை எவ்வாறு நடந்தது, கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் அவர் அணிந்திருந்த துணி ஆகியவற்றை கைப்பற்றி அவருக்கு உதவிய ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த சங்கரையும் கைது செய்து இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios