திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்து திமுகவின் பொதுச்செயலாளராக கடந்த 43 ஆண்டுகளாக இருந்து வந்தார் பேராசிரியர் க.அன்பழகன். தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உற்ற தோழனாக இறுதி காலம் வரையில் விளங்கி நட்புக்கு எடுத்துக்காட்டாக அன்பழகன் வாழ்ந்து மறைந்திருக்கிறார். அரசியலில் அரசியலில் கட்சிக்கும் ஆட்சிக்கும் பல்வேறு சோதனைகள் ஏற்பட்டபோதும் கருணாநிதியை விட்டு விலகாமல் இறுதி வரை அவருடன் இருந்தவர் அன்பழகன்.

ஒவ்வொருமுறை கட்சி பிளவுபட்டு முக்கிய தலைவர்கள் தனிக்கட்சி கண்டபோதும் அன்பழகன் கருணாநிதியுடன் உறுதியுடன் இருந்தார். அரசியலை கடந்தும் குடும்ப ரீதியாகவும் கருணாநிதியும் அன்பழகனும் இணக்கமாக இருந்தனர். கருணாநிதியின் குடும்ப விழாக்கள் அனைத்தும் அன்பழகன் தலைமையில் தான் நடக்கும். அதே போல அன்பழகனின் குடும்ப விழாக்கள் அனைத்தும் கருணாநிதியின் தலைமையில் தான் நடந்துள்ளன. கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ல் கருணாநிதி மறைந்த பிறகு கட்சி பணிகள் அனைத்தில் இருந்தும் அன்பழகன் ஒதுங்கி இருந்தார்.

பெரியப்பாவும் மறைந்து விட்டார்.. என்ன சொல்லி தேற்றிக்கொள்வேன்..? கண்ணீருடன் கலங்கிய ஸ்டாலின்..!

வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்த அன்பழகனுக்கு கடந்த மாதம் 24ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சையில் இருந்த அவர், இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவரது மறைவு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட ஒட்டுமொத்த கட்சியினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. பொதுச்செயலாளரின் மறைவையொட்டி கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவார காலத்திற்கு ரத்து செய்யப்படுவதாகவும் கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

திமுக பொதுச்செயலாருக்கு அஞ்சலி செலுத்த அதிமுகவினரோடு வந்த ஓ.பி.எஸ்..!

சென்னை கீழ்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பழகன் உடலுக்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக நிர்வாகிகள், வைகோ, திருமாவளவன், அன்புமணி ரஜினிகாந்த்,கமல்,வைரமுத்து உட்பட ஏராளமான பிரமுகர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மாலை 4 மணியளவில் அன்பழகன் உடல் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக வேலங்காடு மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உட்பட ஆயிரக்கணக்கானோர் நடந்து வர கொண்டு செல்லப்பட்டு அன்பழகனின் உடல் மாலை 5.50 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.

கருணாநிதி-அன்பழகன்..! இறப்பிலும் இணை பிரியாத உயிர்த் தோழர்கள்..!