கட்சியின் நிர்வாக வசதிக்காக தென்காசி மாவட்டத்தை இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 72 திமுக கழக மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் இன்னும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட மாவட்ட கழக நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை.

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக தனுஷ் குமாரை நியமிக்கப்போவதாக தகவல் பரவியதால், சிட்டிங் மா.செ செல்லதுரை ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் தர்ணா செய்தனர். மாவட்ட துணை செயலாளர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த திமுகவைச் சேர்ந்த விஜய அமுதா எனும் பெண் நிர்வாகி, தென்காசி வடக்கு திமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த பிரச்சனைகள் எல்லாம் திமுக தலைமைக்கு பெரும் தலைவலியை கொடுத்த நிலையில் திமுக தலைமை தற்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

இதையும் படிங்க..குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி..! 2 நாட்களுக்கு டாஸ்மாக் கிடையாது - அதிரடி உத்தரவு!

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘கட்சி நிர்வாக வசதிக்காகவும்- கட்சி பணிகள் செம்மையாக நடைபெறவும், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்கள் சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒன்றிய, நகர கழகங்கள் பின்வருமாறு அடங்கியதாக அமையும். தென்காசி வடக்கு மாவட்டம்- சங்கரன் கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்ற தொகுதிகளை அடங்கியதாக அமையும்.

இதில் சங்கரன்கோவில் (3 ஊராட்சிகள் மட்டும்), மேலநீலிதநல்லூர் கிழக்கு, மேலநீலிதநல்லூர் மேற்கு, மேலநீலிததநல்லூர் தெற்கு, குருவிகுளம் மேற்கு, குருவிகுளம் தெற்கு, குருவிகுளம் கிழக்கு ஆகிய ஒன்றியங்கள் மற்றும் சங்கரன்கோவில் நகரம், வாசுதேவநல்லூர் வடக்கு, வாசுதேவநல்லூர் தெற்கு, சங்்கரன்கோவில் வடக்கு, சங்கரன்கோவில் தெற்கு ஆகிய ஒன்றியங்கள் மற்றும் புளியங்குடி நகரம் ஆகிய ஒன்றியம், நகரங்கள் அடங்கியதாக இருக்கும்.

இதையும் படிங்க..பள்ளிகளுக்கு தீபாவளி மறுநாள் விடுமுறையா ? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன சூப்பர் நியூஸ்.!

தென்காசி தெற்கு மாவட்டத்தில் கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கும். மேலும் கடையநல்லூர், தென்காசி மேற்கு, செங்கோட்டை ஆகிய ஒன்றியங்கள் மற்றும் கடையநல்லூர் நகரம். ஆலங்குளம் தெற்கு, கடையம் வடக்கு, கடையம் தெற்கு, பாப்பாக்குடி, கீழப்பாவூர் கிழக்கு ஆகிய ஒன்றியங்கள். தென்காசி கிழக்கு, கீழப்பாவூர் மேற்கு, கடையநல்லூர் (3 ஊராட்சிகள் மட்டும்), ஆலங்குளம் வடக்கு ஆகிய ஒன்றியங்கள் மற்றும் தென்காசி நகரம், சுரண்டை நகரங்கள் அடங்கியதாக இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..23ம் புலிகேசி போல காங்கிரஸ் கட்சி நிலைமை இருக்கு.. பிறந்தநாளில் புலம்பிய கே.எஸ் அழகிரி!