திமுக புதிதாக 2 அணிகள் உருவாக்கம்.. தயாநிதி மாறன், கதிர் ஆனந்துக்கு புதிய பொறுப்பு.!
திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கழக சட்டத்திட்ட விதி 26 பிரிவு 1ன் படி திமுக உயர்நிலை செயல் திட்டக்குழுவில் இடம்பெறும் உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, ப.செல்வராஜ், கனிமொழி மற்றும் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் திட்டக்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- திமுகவில் புதிய மாநில நிர்வாகிகள், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் நியமனம்... அறிவிப்பு வெளியிட்டார் துரைமுருகன்!
மேலும், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்களாக ஆற்காடு வீராசாமி, டிகேஎஸ் இளங்கோவன், தயாநிதி மாறன், சுப.தங்கவேலன், எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், கரூர் கேசி பழனிசாமி, கோவை மு.கண்ணப்பன், எல்.கணேசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருச்சி சிவா, எவ வேலு, பொன் முத்துராமலிங்கம், ஜெகத்ரட்சகன், மு.பெ.சாமிநாதன், எல்.மூக்கையா, திருச்செங்கோடு கந்தசாமி, கும்மிடிப்பூண்டி கி.வேணு, பெ.குழந்தைவேலு, குத்தாலும் பி.கல்யாணம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திமுக இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி ஆகிய அணிகளுக்கு புதிய நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி, மருத்துவ அணி, பொறியாளர் அணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இந்நிலையில், திமுகவில் புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அமைப்பு சாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி ஆகிய இரு அணிகளாகும்.
இதையும் படிங்க;- திமுக அரசை விமர்சிக்க எதுவும் இல்லாததால் பொய் வதந்தி பரப்புகிறது... பாஜக மீது மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு!!
* அமைப்பு சாரா ஓட்டுநர் அணி
அமைப்பு சாரா ஓட்டுநர் அணி தலைவர்- டி.எம்.கதிர் ஆனந்த்
அமைப்பு சாரா ஓட்டுநர் அணி செயலாளர் - டி.செங்குட்டுவன்
அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைத் செயலாளர்கள் டாக்டர் முத்துராஜா, பணப்பட்டி கே.தினகரன், நாகர்கோவில் எம்.சிவராஜ், பொன்னேரி ஏ.ஆர்.டி.உதயசூரியன், விஷ்ணு பிரபு.
* விளையாட்டு மேம்பாட்டு அணி
விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர்- தயாநிதி மாறன் எம்.பி.
விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலர்கள் - கௌதம சிகாமணி, எஸ்.ஆர்.பார்த்திபன், ஈஸ்வரப்பன், பைந்தமிழ் பாரி, வே.நம்பி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.