திமுகவில் மீண்டும்  மு.க.அழகிரியை சேர்த்தால் மட்டுமே  திமுக 2021 சட்டமன்ற தேர்தலில்  ஆட்சியை பிடிக்கும் என மதுரையில் முக. அழகிரி ஆதரவாளர்கள் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.   மதுரையில்  கட்சி பிரமுகர் இல்ல விழாவில் மு.க.அழகிரி கலந்துகொண்டார் அப்போது அவருடன் வந்த அவரின் ஆதரவாளர்கள் இவ்வாறு  கூறினர். உட்கட்சி விவகாரம்,  மற்றும்  திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட  காரணங்களுக்காக  திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும் ஸ்டானின் சகோதரருமான மு.க.ஆழகிரி.

  

திமுக தலைவர் மு . கருணாநிதி மரணத்திற்குப் பின்னர்,  தன்னை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் இல்லை என்றால் கட்சி இரண்டாக பிளவுபடும்  என்று எச்சரித்தார்.  தன்னை தவிர்த்தால் திமுகாவால்  இனி எந்த தேர்தலிலும் வெற்றிபெற முடியாது எனவும் திமுகவுக்கு  சாவால் விடுத்தார் அழகிரி ,  அதற்காக தனது ஆதரவாளர்களை திரட்டி பேரணி நடத்தப் போவதாக அறிவித்தார் ஆனால் அவர் திட்டமிட்டபடி அது வெற்றிபெற வில்லை. பின்னர் அவர் எடுத்த அனைத்து முயற்ச்சிகளும் தோல்வியில் முடிந்தது.  இந்நிலையில்  மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் உள்ள கட்சி பிரமுகர் காதணி விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொண்டார் , அப்போது, 

 

இதையும் படிங்க: நான் திமுகவா இல்லையானு உதய் தம்பி சொல்லட்டும்...!! கரைவேட்டு போர்த்தி , நாஞ்சிலை கண்கலங்க வைத்த உயத்...
 

அவருக்கு தொண்டர்கள் தடபுடலாக உற்சாக வரவேற்பு கொடுத்தனர் . அவரது வாகனத்துக்கு முன்னும் பின்னும்  டூவிலர் மற்றும் கார்களில் ஆதரவாளர்கள் புடைசூழ மு.க. அழகிரி காரில் அழைத்து வரப்பட்டார் .  வழக்கம் போல வழி நெடுகிலும் வாழை மரங்கள் தோரணங்கள்  கட்டப்பட்டு பிளக்ஸ் பேனர்கள் குவிந்திருந்தது,  அலங்கார வளைவுகள், தோரணங்கள் கட்டப்பட்டு அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் அப்போது அவருடன் வந்த தொண்டர்கள் மு.க.அழகிரி குறித்து அவரது கூறியதாவது: உண்மையான திமுக தொண்டர்கள் ‍ எப்போதும் மு.க.அழகிரி பக்கம் தான் உள்ளனர். நாங்கள் என்றும் கட்சி விட்டு கட்சி மாற போவதில்லை  மு.க.அழகிரி பக்கம் தான் இருப்போம் . 

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் திமுகவில்  அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரியை இணைக்க வேண்டும் இல்லையெனில் திமுகவுக்கு இழுபறியிலே நீடிக்கும் என்றனர்.