இலக்கிய சொற்பொழிவாளரும்,  அரசியல் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்துக்கு சால்வைக்கு பதிலாக திமுக கரை வேட்டியை  போர்த்தி உதயநிதி ஸ்டாலின் வர வேற்ற சம்பவம்  திமுக தொண்டர்கள் மத்தியில் நெழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  அட கலைஞர் ரூட்டை கரெக்டா புடிச்சுட்டாரே உதய்... அப்போ எப்படியும் திமுக கரைசேர்ந்துடும் என்று புலங்காகிதம் அடைந்துவருகின்றனர். அப்படி என்னதான் நடந்தது என்று கேட்கிறீர்களா..? முரசொலி குறித்து ரஜினி விமர்சனம் அதற்கு பதிலடி என்று திமுக  ஒரு முனையில் தன்வேலையை செய்து கொண்டிருக்கும் அதே வேலையில் . மறுபுறம் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலையும் குறிவைத்து அதற்காக வியூகங்களை வகுக்கத் தெடங்கியிருக்கிறது.  அதற்கு முதலில் திமுக மீது அதிமுக , பாஜக , போன்ற கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளை, மற்றும் அபாண்டங்களை கழுவிவிட வேண்டும் என்பதுதான் அது. 

அதாவது, இணையம் மூலம் அரசியல் பயிலும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு தொன்மை வரலாற்றை எடுத்துக் கூறும் வகையில் திமுக இளைஞரணி சார்பில் பொய் பெட்டி என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு  நடந்து வருகிறது . கடந்த சில மாதங்களுக்கு முன்பு  திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட  மு க ஸ்டாலின் மகன் உதயநிதியின் ஆலோசனையில் இந்த நிகழ்ச்சி உருவாகியுள்ளது.  கடந்த  நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்தார் உதய் என்ற காரணத்திற்காகவும், அதில்   கிடைத்த வெற்றிக்கு பரிசாகவும் உதயநிதிக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது . இந்நிலையில் திமுக இளைஞரணி சார்பில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பொய் பெட்டி என்ற நிகழ்ச்சியை அவர் தொடங்கியுள்ளார்.   

 

இது குறித்து தெரிவித்துள்ள அவர் ,  திமுக மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் திமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல பெரியார் , அண்ணா காலம்தொட்டு இன்றுவரை தொடர்கின்றன ,  இணையம் மூலம் அரசியல்  பயிலும் இளம் தலைமுறைக்கு உண்மை வரலாற்றை எடுத்துச் சொல்லும்  முயற்சிதான் போய் பெட்டி என  அறிவித்துள்ளார் .  இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அதன் இரண்டாவது நிகழ்ச்சியில் இலக்கியச் சொற்பொழிவாளரும் , அரசியல் பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார் .  அப்போது பேசிய அவர்,  திமுக மீது சொல்லப்படும் அவதூறுகள் திட்டமிடப்பட்ட சதி என்றார். பெரியார், அண்ணா ,கருணாநிதியால் வளர்க்கப்பட்ட திராவிட சிந்தனை காக்கப்பட வேண்டும் அதனை இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ள வெண்டும்  என்று பேசினார் ,  தொடர்ந்து பேசிய அவர்,   நான் திமுகவா இல்லையானு உதயநிதி தம்பி சொல்லட்டும்  என்று தன் பேச்சின்  இடையே அழுத்தமாகச் சொல்லி சிரித்தார்.

 

பின்னர்  அவருக்கு இறுதியாக  சால்வை  போர்த்தும்போது...  அங்கிருந்தவர்கள்  பட்டு சால்வையை  உதயநிதி  கையில கொடுக்க .  அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன் வண்டியில இருக்கும் திமுக கட்சி கரை வேட்டியை  எடுத்துவர சொல்லி அதை நாஞ்சில் சம்பத்திற்கு போர்த்தினார் உதய்.  சால்வையை போட்டுவிட்டு... இது தி.மு.கழக  கரை வேட்டிண்ணே...  இதை கட்டிக்கிறதும் கட்டிக்காததும் உங்கள் இஷ்டம் என்று அதே அழுத்தத்துடன் சொல்லி அரங்கை அதிர வைத்தார் உதய்யின் செயலைக் கண்ட நாஞ்சிலும் மேடையில் நெக்குருகி போனார்.  அப்போது அங்கிருந்தவர்கள் உண்மையிலேயே இது கலைஞரின் வாரிசு அரசியல்தாப்பா... கலைஞரையே மிஞ்சிட்டாப்ள  உதய் என்று வியந்தனர்.