தஞ்சையில் டாஸ்மாக் கடையில் மோதல்; திமுக கவுன்சிலர் உள்பட இருவருக்கு அரிவாள் வெட்டு
தஞ்சை மாவட்டம் திருவாரூர் அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட மோதலில் திமுக கவுன்சிலர் உள்பட இருவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் கிருபானந்தம். இவர் அப்பகுதியில் திமுக கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது நண்பரான் அப்பு என்பவருடன் இணைந்து கிருபானந்தம் அப்பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்றுள்ளார். அங்கு இவருக்கும், வேறு சில நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த தகராறு முற்றிய நிலையில் கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்பு ஆகிய இருவருக்கும் அரிவாளால் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துக் கொண்டு சேர்த்தனர்.
தவறான சிகிச்சையால் இளம்பெண் உயிரிழப்பு? மருத்துவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்புவை அரிவாளால் வெட்டிய திருவையாறு பகுதியைச் சேர்ந்த துளசிராமன், நடேசன், அருண், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திமுகவின் தங்க தமிழ்செல்வனை வீட்டிற்கே நேரில் சென்று சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்
டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட வாய்த்தகராறில் திமுக கவுன்சிலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.