Asianet News TamilAsianet News Tamil

முன்னாள் அமைச்சர்கள்… வாரிசுகள்… இவர்கள் தான் திமுக வேட்பாளர்களா ? பொங்கித் தள்ளும் தொண்டர்கள் !!

திமுக உட்பட திமுக கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் குறித்த விவரங்களை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன.

dmk candidates
Author
Chennai, First Published Mar 15, 2019, 11:26 PM IST

தமிழகம் மற்றும் , புதுச்சேரியில் உள்ள  40 நாடாளுமன்ற தொகுதிகளில், திமுக 20 தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகள் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. திமுக  வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. 

dmk candidates

இந்த தொகுதிகளில் போட்டியிடும் திமக வேட்பாளர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் வெளிவந்துள்ளன. அதன்படி மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்,  தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி ,  தென்சென்னையில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ,  நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் ஆ.ராசாவும் திருவண்ணாமலை தொகுதியில் அண்ணாதுரை என்பவரும் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

dmk candidates

சேலத்தில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் தாமரை கண்ணன் போட்டியிடலாம் எனவும் கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் தேர்வு செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது. 

dmk candidates

அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகன், தஞ்சையில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், நெல்லையில் திரவியம் என்பவரும், தென்காசியில் துரை என்பவரும் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. 

dmk candidates

வடசென்னையில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் மகன் கலாந்தி என்பவரும் தரும்புரியில் வழக்கரிஞர் பிரிவைச் சேர்ந்த மணி, செந்தில் குமார், தாமரைக்கண்ணன் ஆகியோரும் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதே போல் கள்ள்ககுறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கெநதம சிகாமணி போட்டியிட உள்ளார்.

ஆனால் இப்படி ஒரு தகவல் கிடைத்தவுடன் பல திமுக தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். தொடர்ந்து பழைய ஆட்கள் அல்லது அவர்களது வாரிசுகள் இவர்கள் தான் வேட்பாளர்களா ? கட்சிக்காக உழைத்தவர்கள் வேறு யாரும் இல்லையா ? என அடிமட்டத் தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios