நாடாளுமன்ற தேர்தல் பணியை தொடங்கிய திமுக... தேர்தல் அறிக்கை, கூட்டணி கட்சிகளுடன் பேச குழு அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திடவும், தேர்தல் அறிக்கை தயார் செய்திடவும் குழு அமைத்து திமுக தலைமை அறிவித்துள்ளது. 

DMK announces formation of committee to prepare constituency distribution and election manifesto on the occasion of parliamentary elections KAK

தேர்தல் பணியை தொடங்கிய திமுக

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. இந்தநிலையில், திமுக சார்பாக தேர்தல் அறிக்கை, கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்:

DMK announces formation of committee to prepare constituency distribution and election manifesto on the occasion of parliamentary elections KAK

தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு

தலைமை: கனிமொழி கருணாநிதி எம்.பி. (கழகத் துணைப் பொதுச் செயலாளர்)  டி.கே.எஸ்.இளங்கோவன் (தலைமைக் கழகச் செய்தித் தொடர்புத் தலைவர்) ஏ.கே.எஸ்.விஜயன் (கழக விவசாய அணிச் செயலாளர்) பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (கழகச் சொத்துப் பாதுகாப்புக் குழுச் செயலாளர்) டி.ஆர்.பி.இராஜா (கழகத் தகவல் தொழிநுட்ப அணிச் செயலாளர்) கோவி.செழியன் (கழக வர்த்தகர் அணி துணைத் தலைவர்) கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி.  சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., (கழக மாணவரணிச் செயலாளர்) எம்.எம்.அப்துல்லா எம்.பி., (கழக அயலக அணிச் செயலாளர்) மருத்துவர் எழிலன் நாகநாதன் எம்.எல்.ஏ. (கழக மருத்துவ அணிச் செயலாளர்) மாண்புமிகு மேயர் பிரியா

தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு

இதே போல 2024- நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில்,  கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு,தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின்,

DMK announces formation of committee to prepare constituency distribution and election manifesto on the occasion of parliamentary elections KAK

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு

தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட திமுக பொருளாளர்  டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில்,

குழு தலைவர் : திரு. டி.ஆர்.பாலு (கழகப் பொருளாளர்)

குழு உறுப்பினர்கள் :
திரு.கே.என்.நேரு (கழக முதன்மைச் செயலாளர்) திரு. இ.பெரியசாமி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) திரு.க.பொன்முடி (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) திரு. ஆ.ராசா எம்.பி., (கழகத் துணைப் பொதுச்செயலாளர்) திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

இதையும் படியுங்கள்

கருணாநிதியின் வலதுகரமான ஆற்காடு வீராசாமிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி..!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios