MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ADMK vs BJP: இரட்டை இலைக்கு செக் வைக்கும் தாமரை! பணியுமா எடப்பாடி பழனிசாமியின் படை? ஈபிஎஸ் ரகசிய மூவ் என்ன தெரியுமா?

ADMK vs BJP: இரட்டை இலைக்கு செக் வைக்கும் தாமரை! பணியுமா எடப்பாடி பழனிசாமியின் படை? ஈபிஎஸ் ரகசிய மூவ் என்ன தெரியுமா?

தமிழக அரசியல் களத்தில் அதிமுக - பாஜக இடையேயான இடப்பங்கீட்டுப் பனிப்போர் உச்சத்தை எட்டியுள்ளது. 64 இடங்களைக் கேட்கும் பாஜகவின் அழுத்தத்திற்கு மத்தியில், 170 தொகுதிகளில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி இலக்கு வைத்துள்ளார். 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 09 2026, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தமிழக அரசியல் களத்தில் மாறும் கணக்குகள்
Image Credit : Asianet News

தமிழக அரசியல் களத்தில் மாறும் கணக்குகள்

தமிழக அரசியல் களம் இப்போது ஒரு சதுரங்க வேட்டையாக மாறியிருக்கிறது. ஒருபுறம் ஆளுங்கட்சியான திமுக-வை வீழ்த்த வியூகம் வகுக்கும் அதே வேளையில், மறுபுறம் கூட்டணிக் கட்சிக்குள்ளேயே ‘யார் பெரியவர்?’ என்கிற பலப்பரீட்சை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, அதிமுக - பாஜக இடையிலான இடப்பங்கீடு விவகாரம் இப்போது ஒரு பனிப்போராக வெடித்துள்ளது.

26
தாமரை வைக்கும் 'மெகா' செக்!
Image Credit : Asianet News

தாமரை வைக்கும் 'மெகா' செக்!

2026-ல் தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்பதில் பாஜக மிகத்தெளிவாக இருக்கிறது. கடந்த தேர்தலில் கிடைத்த 11 சதவீத வாக்கு வங்கியைத் தனது துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும் பாஜக, இந்த முறை அதிமுக-விடம் மிரட்டலான ஒரு பட்டியலை நீட்டியுள்ளது.

பாஜக-வுக்கு மட்டும் 40 இடங்கள்

டி.டி.வி.தினகரனுக்கு 12, ஜி.கே.வாசனுக்கு 5 எனத் தனது ஆதரவு சக்திகளுக்கும் சேர்த்து மொத்தம் 64 இடங்களை வளைக்கப் பார்க்கிறது தாமரை தரப்பு. இது அதிமுக-வின் பாரம்பரிய கோட்டையான பல தொகுதிகளைக் குறிவைப்பதாக அமைந்துள்ளதால், இரட்டை இலை தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளது.

Related Articles

Related image1
தலைவா பட ‘டைம் டூ லீடு’ டேக் லைன் நான் போடல... அது அவரோட ஐடியா - ஏ.எல்.விஜய் பகிர்ந்த சீக்ரெட்
Related image2
Now Playing
Power Play-வில் அடித்து ஆடும் விஜய்! பெண்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம்! ஸ்கோர் செய்த தளபதி
36
பணிவாரா எடப்பாடி? - டெல்லி கொடுத்த 'உத்தரவு'
Image Credit : x

பணிவாரா எடப்பாடி? - டெல்லி கொடுத்த 'உத்தரவு'

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடனான பேச்சுவார்த்தையில், எடப்பாடி பழனிசாமி (EPS) ஒரு சாதாரண நிலையில் அமர வைக்கப்பட்டது அதிமுக தொண்டர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "அம்மா இருந்திருந்தால் இப்படி நடக்குமா?" என்ற கேள்வி அடிமட்டத் தொண்டன் வரை ஒலிக்கிறது. பாஜக கேட்கும் இடங்களைத் தர முடியாது என EPS முரண்டு பிடிப்பதால், இப்போது "டெல்லிக்கு வந்து அமித் ஷாவை பாருங்கள்" என அவருக்கு ஒரு நேரடி 'உத்தரவு' பறந்துள்ளது. இந்த டெல்லி பயணம் எடப்பாடியின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முக்கியமான நகர்வாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது அது நடக்காது எனவும் பாஜக வேண்டுமானால் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாட்டுக்கு வரலாம் எனவும் ஈபிஎஸ் கூறியுள்ளதாக தெரிகிறது.

46
ஈபிஎஸ்-ஸின் அந்த 'ரகசிய மூவ்' என்ன?
Image Credit : Asianet News

ஈபிஎஸ்-ஸின் அந்த 'ரகசிய மூவ்' என்ன?

வெளியில் பாஜக-வுடன் மல்லுக்கட்டுவது போலத் தெரிந்தாலும், எடப்பாடி பழனிசாமி ரகசியமாக ஒரு மாஸ்டர் பிளானை கையில் வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

170 தொகுதிகள் இலக்கு: எந்தக் காரணம் கொண்டும் அதிமுக 170 தொகுதிகளுக்குக் கீழ் போட்டியிடக் கூடாது என்பதில் EPS உறுதியாக இருக்கிறார்.

பாமக-வை கேடயமாக்குதல்: அன்புமணிக்கு 15 முதல் 20 இடங்கள் வரை ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் பாஜக-வுக்குக் கொடுக்கும் இடங்களைக் குறைக்க அவர் திட்டமிடுகிறார்.

தனித்து நிற்கும் தைரியம்: "திமுக எதிர்ப்பு ஓட்டுகள் சிதறாமல் இருக்க வேண்டுமானால் மக்கள் அதிமுக-வைத் தான் தேடி வருவார்கள்" எனத் தனது நிர்வாகிகளிடம் ரகசியமாகச் சொல்லி வருகிறார். ஒருவேளை பாஜக அதிக நெருக்கடி கொடுத்தால், தனித்துப் போட்டியிடவும் அவர் தயங்கமாட்டார் என்றே தெரிகிறது.

56
கட்டமைக்கப்படும் போலி பிம்பம்
Image Credit : Asianet News

கட்டமைக்கப்படும் போலி பிம்பம்

ஜெயலலிதா காலத்தைப் போல கறார் காட்ட முடியாமல், டெல்லியின் பிடிக்குள் எடப்பாடி சிக்கியிருப்பதாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்படுகிறது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தனது 'நிர்வாகிகள் பலத்தை' வைத்து பாஜக-வின் செக்கை முறியடிப்பாரா அல்லது டெல்லியில் சரணடைவாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். 

66
கிளைமாக்ஸ் ட்விஸ்ட்
Image Credit : Asianet News

கிளைமாக்ஸ் ட்விஸ்ட்

அமித் ஷா உடனான சந்திப்பிற்குப் பிறகு, அதிமுக தனது பழைய ஆளுமையை மீட்டெடுக்குமா அல்லது பாஜக-வின் நிபந்தனைகளுக்குத் தலை வணங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
அதிமுக பாஜக கூட்டணி
திமுக கூட்டணி கட்சிகள்
பிஜேபி

Latest Videos
Recommended Stories
Recommended image1
குடியரசுத் தலைவரை அவமதித்ததா மேற்கு வங்க அரசு? பிரதமர் மோடி கண்டனம்! மம்தா விளக்கம்!
Recommended image2
தேமுதிக, காங்கிரஸ், அமமுக கட்சிகளை கோட்டை விட்ட தவெக..! கூட்டணிப் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
Recommended image3
அடித்து ஆடும் விஜய்..! பெண்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம்..! ஸ்கோர் செய்த தளபதி
Related Stories
Recommended image1
தலைவா பட ‘டைம் டூ லீடு’ டேக் லைன் நான் போடல... அது அவரோட ஐடியா - ஏ.எல்.விஜய் பகிர்ந்த சீக்ரெட்
Recommended image2
Now Playing
Power Play-வில் அடித்து ஆடும் விஜய்! பெண்களுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம்! ஸ்கோர் செய்த தளபதி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved