ஏலே இமய மலை எங்க ஊரு சாமி மலை எட்டு திசை நடுங்க எட்டு வச்சு வாராரு... கேப்டன் வாராறு...
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இன்று தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் தொண்டர்களை சந்திக்கவுள்ளார்.
விஜயகாந்தும் திரைத்துறையும்
தமிழ் திரையுலகில் தனது முத்திரையை பதித்த விஜயகாந்த், 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1979-ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை படம் மூலம் தமிழ் திரையுலகில் விஜயகாந்த் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களைக் வெகுவாககவர்ந்ததால், அப்போதே விஜயகாந்த் தென்னிந்திய ரசிகர் மன்றம் என்கிற பெயரில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்டது. பின்னர், இதனையடுத்து 1980-ல் இது அகில இந்திய விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம் என்று பெயர் மாற்றம் பெற்றது. ரசிகர் மன்றம் மூலம் பல்வேறு உதவிகளை நடிகர் விஜயகாந்த் செய்து வந்தார். பல்வேறு பிரச்னைகளுக்காகவும் அவர், ரசிகர் மன்றம் மூலம் போராட்டம் நடத்தவும் செய்திருக்கிறார். 1984-ல் இலங்கைத் தமிழர் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டி ரசிகர் மன்றம் மூலம் மிகப்பெரிய போராட்டத்தை அவர் நடத்தி தமிழக மக்களை தன் பக்கம் திரும்பி பார்க்க் வைத்தார்.பசியுடன் யாரும் இருக்கக் கூடாது என்கிற நோக்கில் அவரது அலுவலகத்தில் தினமும் நூற்றுக்கணக்கானோருக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. மேலும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்திடும் வகையில், இலவசமாக தையல் இயந்திரங்கள், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவிகள் என பல்வேறு தரப்பினருக்கும் ரசிகர்கள் மன்றங்கள் மூலமும் தனிப்பட்ட முறையிலும் உதவிக் செய்து கொண்டிருந்தார். நடிகர் விஜயகாந்த்.
அரசியலும் விஜயகாந்தும்
நடிகர் சங்க தலைவராக இருந்த விஜயகாந்த், நடிகர் சங்கத்தில் இருந்த பல கோடி ரூபாய் கடனை முழுவதுமாக அடைக்க முக்கிய நபராகவும் திகழ்ந்தார். தமிழ் சினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாது என்பார்கள். அப்படி, அடுத்து எந்த பிரபலம் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற விவாதம் எழுந்தது. விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகள், 1996, 2001 உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிவாகை சூடியிருந்தனர். இந்த நிலையிலையில் தான் விஜயகாந்த். 14 செப்டம்பர் 2005 அன்று மதுரையில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் "தேசிய முற்போக்கு திராவிட கழகம்" எனும் தனது புதிய கட்சியை ஆரம்பித்தார்.
தமிழகம் முழுவதும் தனி ஒரு மனிதராக சுற்றி சுற்றி பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக- அதிமுக என தமிழக அரசியல் நிலைப்பாடு இருந்த நிலையில் திடீரென தேமுதிக பக்கம் மக்கள் திரும்பும் நிலை உருவானது. 2006 ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8 சதவிகித்திற்கு மேல் வாக்குகளை பெற்றார். மக்களோடும், தெய்வத்தோடும் கூட்டணி என விஜயகாந்த் கூறி வந்த நிலையில், 2011ல் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தமிழக சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்றார். திமுகவை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தேமுதிக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக உருவெடுத்தது.
அத்தைக்கு மீசை முளைக்கட்டும்..! அதிமுகவிற்கு தலைமை யார் என பின்னர் முடிவெடுப்போம்- டிடிவி தினகரன்
மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்த்
இந்தநிலையில் விஜயகாந்திற்கும், முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கும் ஏற்பட்ட கருத்து மோதல் சட்டமன்ற நிகழ்வில் உச்ச கட்டம் அடைந்தது. அதிமுகவால் வெற்றி பெற்ற தேமுதிகவிற்கு இனி இறங்கு முகம் தான் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்திருந்தார். இதனையடுத்து விஜயகாந்தின் நம்பிக்கைக்குரியவராக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதிமுக பக்கம் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவராக இருந்த கருணாநிதி தங்கள் அணிக்கு வரும்படி பல முறை அழைப்பு விடுத்தார். ஆனால் மக்கள் நல கூட்டணியை உருவாக்கிய விஜயகாந்த், வைகோ, திருமாவளவன், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சியோடு சேர்ந்து தேர்தலில் களம் கண்டது. ஆனால் இந்த தேர்தல் தேமுதிகவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்பட்டது. 234 தொகுதிகளிலும் மக்கள் நல கூட்டனி தோல்வி அடைந்தது. 200க்குமேற்பட்ட இடங்களில் டெபாசிட் இழந்தது. இதனையடுத்து மீண்டும் இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சியை பிடித்தது.
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!
பழைய பன்னீர் செல்வமாக வர வேண்டும்
தமிழகம் முழுவதும் சுறு சுறுப்பாக சுற்றி வந்த விஜயகாந்திற்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அவ்வப்போது வெளியில் தலைகாட்டும் விஜயகாந்தின் உடல் நிலையை பார்த்து வேதனைப்படாதவர்கள் யாரும் இல்லை, அந்தளவிற்கு விஜயகாந்த் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவரது உடல் நிலை பலரின் மனதை வேதனைப்படுத்தியது. இந்தநிலையில் இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடும் விஜயகாந்த தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்களை சந்திக்கவுள்ளார். இந்த தகவல் தேமுதிக தொண்டர்களை உற்சாகம் அடையவைத்துள்ளது. நடிகர் விஜயகாந்த் நடித்த சத்ரியன் படத்தில் ஒரு வசனம் வரும் மீண்டும் பழைய பன்னீர் செல்வமா வா என கூறுவார் அப்படித்தான் விஜயகாந்த் பழைய விஜயகாந்தாக வர வேண்டும் என்பதே அனைவரின் ஆவலாக உள்ளது.
இதையும் படியுங்கள்
இபிஎஸ் - ஓபிஎஸ்க்கு ஒரு மணி நேரம் தான் வாய்ப்பு...! பொதுக்குழு வழக்கு இன்று விசாரணை