திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார் என திவாகரன் பேசியுள்ளார் .

தஞ்சையில் திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் இல்லத் திருமண விழா மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திவாகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய சசிகலாவின் தம்பி திவாகரன், திராவிட இயக்கங்களை கட்டிக்காக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார் எனப் பேசினார்.

இன்றை தமிழர்களின் நிலை மிகவும் கேவலமாக இருக்கின்றது. தமிழர்கள் 2-ம் தர குடிமக்களாக நாம் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறோம். நம்முடைய வீரம் எங்கே போனது, நம்முடைய மானம் எங்கே போனது. பெரியாரை கன்னடத்தில் இருந்து வந்த ஒருவன் விமர்சிக்கின்றான். இதையே நாம் கார்நாடகாவில் போய் யாராவது பத்தி பேசிவிட்டு வெளியே வரமுடியுமா? இதை மட்டும் எல்லோரும் சிந்தனை செய்யுங்கள். 

இதையும் படிங்க;- சிக்கியது முக்கிய ஆவணங்கள்... திமுக எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி வீட்டிற்கு சீல்..!

அந்த அளவிற்கு எல்லோருக்கும் துணிச்சல். இந்த துணிச்சல் எல்லாம் எங்கிருந்து வந்தது. ஒவ்வொரு திராவிட தலைவர்கள் நம்மை விட்டு செல்ல செல்ல இந்த துணிச்சல் எல்லோருக்கும் வந்துக்கொண்டிருக்கின்றது. தயது செய்து அன்பர்களே இந்த திருமணவிழாவில் அதிமுக, திமுக என்ற இருக்கட்சியை சேர்ந்தவர்கள் வந்துள்ளீர்கள். உங்களையேல்லாம் நான் ஒன்று கேட்டுக்கொள்வேன் தமிழகம் தமிழ் தான் நமக்கு முதல். தமிழ் மானத்தை யார் காப்பாத்துவார்களோ அவர்களுக்கு நாம் என்னை விலை கொடுத்தாலும் ஈடாகாது. ஆகையால், இறுதிவரை அவர்கள் பின்னால் நாம் நிற்க வேண்டும். அதற்கு தெரிகின்ற ஒரே ஒரு நட்சத்திரமாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டுமே இருக்கிறார் என திவாகரன் புழந்து பேசியுள்ளார். 

இதையும் படிங்க;-  மிசாவையே பார்த்தாச்சு இந்த வழக்கு எல்லாம் எங்களுக்கு ஜூஜிபி... சரவெடியாக வெடித்த மு.க.ஸ்டாலின்..!

மேலும், பேசிய அவர் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தான் மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றிருக்கும். அந்த வெற்றி பெரும்பாலான இடங்களில் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் 85% உள்ளாட்சி இடங்களில் திமுக வெற்றி பெற்றிருக்கும். எங்கள் பகுதியில் 4 ஒன்றியங்களில் திமுக வெற்றி பெற்றது. வெற்றிச் சான்றிதழை தராமல் இழுத்தடித்துவிட்டு அடுத்த நாள் செய்தித்தாளில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது என்று குறிப்பிட்டிருந்தார்.