தர்மத்திற்கு சோதனை வரலாம்! ஆனால் வீழ்ந்து விடாது! தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும்! ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு என அறிவித்திருந்தார். ஆனால், அவரை இபிஎஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தனது வாழ்க்கையை சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு தர்மத்தின் வழியில், எண்ணம் சொல் செயல் இம்மூன்றையும் ஒரே நேர்கோட்டில் செயல்படுத்துபவர் தான் உண்மையான தலைவர் என ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுபோதாக அறிவித்தனர். அதன்படி எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் தென்னரசு வேட்பாளராகவும், ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக செந்தில் முருகன் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தால் தனது ஆதரவு வேட்பாளரை ஓபிஎஸ் திரும்ப பெற்றார்.
இதையும் படிங்க;- போயஸ் கார்டன் சென்ற ஓபிஎஸ் இளைய மகன்.. ஜெயவேதாவிற்கு நகை அணிவித்து வாழ்த்திய ஜெயபிரதீப்.. வைரல் போட்டோ.!
மேலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு என அறிவித்திருந்தார். ஆனால், அவரை இபிஎஸ் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் விமர்சனம் செய்பவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் முகநூல் பதிவில்;- தனது வாழ்க்கையை சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு தர்மத்தின் வழியில், எண்ணம் சொல் செயல் இம்மூன்றையும் ஒரே நேர்கோட்டில் செயல்படுத்துபவர் தான் உண்மையான தலைவர்.
இதையும் படிங்க;- அதிமுகவின் பிளவுக்கு காரணமே பாஜக தான்.! இப்போவாவது எம்ஜிஆரின் தொண்டர்கள் உணர வேண்டும்- துரை வைகோ
அப்படி தர்மத்தின் வழியில் செயல்படும் தலைவர். செயல்கள் ஒரு சில மனிதர்களுக்கு தற்காலிகமாக கசப்பு மருந்து போல் தெரியலாம். ஆனால், அதுதான் நிரந்தர சஞ்சீவினி மருந்தாக இருக்கும் என்பதே உண்மை.
இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒருவர்தான் ஐயா ஓ.பன்னீர்செல்வம் அவர்களை முழுமையாக அறிந்து அவருடைய திறமையை விசுவாசத்தை உழைப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டவர்.
அப்படிப்பட்ட நீதி தேவதை தற்போது இல்லையே என்பதை நினைக்கும் போது மனம் கலங்குகிறது. தர்மத்திற்குச் சோதனை வரலாம், ஆனால் வீழ்ந்து விடாது என்பது வரலாற்று உண்மை. தர்மம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வரை எங்களது முயற்சிகள் தொடரும் என கூறியுள்ளார்.