அதிமுகவின் பிளவுக்கு காரணமே பாஜக தான்.! இப்போவாவது எம்ஜிஆரின் தொண்டர்கள் உணர வேண்டும்- துரை வைகோ
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளரான ஈவிகே எஸ் இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என துரை வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.
ஈவிகேஎஸ் வெற்றி உறுதி
மாமன்னர் திருமலை நாயக்கரின் 440 வது பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள திருமலை நாயக்கரின் முழு உருவ சிலைக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையை தலைநகராக கொண்டு திருச்சி முதல் கன்னியாகுமரி வரை தென் தமிழ்நாட்டை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய காலத்திலேயே ஒரு சமூக நல்லுணர்வு ஏற்பட இந்த இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமை உணர்வு ஓங்கிட பாடுபட்டவர் இஸ்லாமிய மக்கள் போற்றும் வகையில் பள்ளிவாசல்களை கட்ட இலவசமாக நிலங்களை தானமாக கொடுத்தவர் என தெரிவித்தார்.
''பொறுத்திருந்து பாருங்கள்''..! உச்சநீதிமன்றத்தில் எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஓபிஎஸ் அணி.?
அதிமுக பிளவுக்கு பாஜக தான் காரணம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளரான ஈவிகே எஸ் இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவரது மகன் திருமகன் ஈவேரா ஒன்றரை வருடம் மட்டுமே சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் ஏழை எளிய மக்களிடம் எளிமையாக பழகியவர். உதவிகள் பல செய்தவர் என கூறினார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை ஒன்றிணைக்கும் வேலையை பாஜக செய்கிறதா என்ற கேள்விக்கு? பதில் அளித்த அவர், அதிமுக பிளவுக்கு காரணமே பாஜக தான். எம்ஜிஆர் உருவாக்கி கட்டிக் காத்த இயக்கம். இந்த இயக்கம் பிளவுபட காரணமானவர்களை அதிமுகவினர் யார் என்று உணர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
புகையிலை தடை சட்டம் தேவை
புகையிலைப் பொருட்களை தடை செய்ய ஒரு புதிய சட்டம் கொண்டுவர தமிழக அரசு முயற்சி செய்யவேண்டும். அல்லது அவற்றை வலு சேர்க்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், இதனை தமிழக அரசு செயல்படுத்தும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி..! ஒவ்வொரு கட்சிக்கு ஏற்றபடி கூவுகிறார்- செல்லூர் ராஜு அதிரடி