செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி..! ஒவ்வொரு கட்சிக்கு ஏற்றபடி கூவுகிறார்- செல்லூர் ராஜு அதிரடி

திமுக குடும்பத்தை பற்றி தரை குறைவாக பேசியவர் தான் செந்தில் பாலாஜி. அவர் பேச்சு எல்லாம் ஒரு பொருட்டு அல்ல. அவர் ஒரு பச்சோந்தி என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

Former Minister Sellur Raju criticized Senthil Balaji as a chameleon

பேனா சிலை- மறுபரிசீலனை செய்திடுக

மன்னர் திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கடம்பூர் ராஜு,  கலைஞரின் பேனா சிலை விவகாரத்தில் சீமான் போன்ற அரசியல் பிரமுகர்கள் கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார்கள். கலைஞர் பேனா சிலை விவகாரத்தில் யாரும் ஒற்றுக்கொள்ளவில்லை எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

''பொறுத்திருந்து பாருங்கள்''..! உச்சநீதிமன்றத்தில் எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஓபிஎஸ் அணி.?

Former Minister Sellur Raju criticized Senthil Balaji as a chameleon

செந்தில் பாலாஜி ஒரு பச்சோந்தி

இதனை தொடர்ந்த பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, செந்தில் பாலாஜி நன்றாக கூவுகிறார். அதிமுகவில் இருந்த போது நன்றாக கூவினார். செந்தில் பாலாஜி பல கட்சிக்கு சென்று வந்தவர் அவருக்கு அடையாளம் கொடுத்தவர் ஜெயலலிதா. திமுக குடும்பத்தை பற்றி தரை குறைவாக பேசியவர் செந்தில் பாலாஜி. அவர் பேச்சு எல்லாம் ஒரு பொருட்டு அல்ல. அவர் ஒரு பச்சோந்தி. வருகின்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக பெருவாரியான வெற்றி பெறும். மிகப்பெரிய மாற்றத்தை எடப்பாடி பழனிசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் கொடுப்பார்.

Former Minister Sellur Raju criticized Senthil Balaji as a chameleon

ஈரோடு தேர்தல்-அதிமுக அமோக வெற்றி

திமுக அரசு பொய்யாக பேசி ஆயிரம் ரூபாய் பணம் தருகிறேன், கேஸ் மானியம் தருகிறேன், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மின் கட்டணத்தை உயர்த்த மாட்டேன் என கூறிவிட்டு அனைத்தையும் உயர்த்தி விட்டதாக குற்றம் சாட்டினார்.  ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அரசுக்கு மக்கள்  தகுந்த பாடத்தை புகுட்டுவார்கள் என செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

நீட் என்ன ஆச்சு.? எய்ம்ஸ் கட்டியாச்சா.? மதுரைக்கு வரும் உதயநிதியிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய ஆர்பி.உதயகுமார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios