Asianet News TamilAsianet News Tamil

நீதிமன்றம் தீர்ப்பு இறுதியானது இல்லை.. டுவிஸ்ட் வைத்து புதிய தகவலை கூறிய கோவை செல்வராஜ்..!

 அதிமுக தொண்டர்கள் இபிஎஸ் செயலால் மனம் வருந்தி உள்ளனர். இபிஎஸ் அதிமுகவை அழிக்கும் முடிவை கைவிட வேண்டும். அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே வழி நடத்த முடியும். 

Court decision is not final.. kovai selvaraj
Author
First Published Sep 2, 2022, 12:58 PM IST

தேர்தல் ஆணையத்தின் படி ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர் என கோவை செல்வராஜ் கூறியுள்ளார். 

அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க;- ஓபிஎஸ் அணியில் இணைகிறாரா நடிகை விந்தியா..? அவரே சொன்ன விளக்கம் இதோ...

Court decision is not final.. kovai selvaraj

இந்த வழக்கை துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு செல்லாது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு அளித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தீர்ப்பின் முழு விவரம் வெளியானதுடன் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

Court decision is not final.. kovai selvaraj

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- இபிஎஸ் பொது செயலாளராவது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம். அதிமுக தொண்டர்கள் இபிஎஸ் செயலால் மனம் வருந்தி உள்ளனர். இபிஎஸ் அதிமுகவை அழிக்கும் முடிவை கைவிட வேண்டும். அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம் மட்டுமே வழி நடத்த முடியும். தேர்தல் ஆணையம் கொடுக்கும் தீர்ப்பே இறுதி தீர்ப்பு.

இதையும் படிங்க;-  அதிமுக அலுவலகம் இபிஎஸ் அப்பா விட்டு சொத்தா? என் வீட்டிலே நான் திருடுவேனா? திருப்பி அடிக்க ஆரம்பித்த ஓபிஎஸ்.!

Court decision is not final.. kovai selvaraj

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மாறி மாறி தீர்ப்பு வழங்குகிறது. தேர்தல் ஆணையம் கொடுக்கும் தீர்ப்பே இறுதி தீர்ப்பு. தேர்தல் ஆணையம் சொல்லும் தீர்ப்பில் நீததிமன்றம் தலையிட முடியாது. தேர்தல் ஆணையத்தின் படி ஒ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளனர் என கோவை செல்வராஜ் கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios