ஓபிஎஸ் அணியில் இணைகிறாரா நடிகை விந்தியா..? அவரே சொன்ன விளக்கம் இதோ...

தர்மயுத்த நாடகத்தையே தள்ளி நின்னு வேடிக்கைப் பார்த்தவ நான் ,  இந்த அதர்ம யுத்த நாடகத்துக்கு கண்டிப்பா ஆதரவு தரமாட்டேன் என நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

Actress Vindhya has denied the reports that she is joining the OPS team

அதிமுகவில் அதிகார மோதல்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என இரண்டு பிரிவாக அதிமுக இயங்கி வருகிறது.  கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது சிறப்பு தீர்மானம் மூலம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதன் கராணமாக இரு தரப்பும் மோதிக்கொள்ளும் நிலை தீவிரம் அடைந்துள்ளது. இரு தரப்பும் நீதிமன்றத்தில் மாறி, மாறி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஓபிஎஸ் சாதகமாக தீர்ப்பு வந்த நிலையில், இபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அனைவரும் ஒன்றினைந்து செயல்படுவோம், நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் என ஓபிஎஸ் தெரிவித்து இருந்தார். இதற்க்கு வாய்ப்பே இல்லையென இபிஎஸ் தரப்பு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

Actress Vindhya has denied the reports that she is joining the OPS team

ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவிக்கும் நிர்வாகிகள்

இந்தநிலையில் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து வந்த மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் அணிக்கு தாவி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதே போல உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஓபிஎஸ் அணியில் தன்னை இணைத்துக்கொண்டார். நடிகர் பாக்யராஜ் ஓபிஎஸ்சை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், இரு தரப்பும் ஒன்றினைய பாடுபடுவேன் என குறிப்பிட்டு இருந்தார். இதனையடுத்து அடுத்தாக யார் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.  அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளராக இருக்கும் நடிகை விந்தியாவுடன்  ஓபிஎஸ் அணியினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. 

 

விந்தியா நிலைப்பாடு என்ன..?

இந்தநிலையில் நடிகை விந்தியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தர்மயுத்த நாடகத்தையே தள்ளி நின்னு வேடிக்கைப் பார்த்தவ நான் ,  இந்த அதர்ம யுத்த நாடகத்துக்கு கண்டிப்பா ஆதரவு தரமாட்டேன்.. கருணாநிதிக்கு பாராட்டு பத்திரம் வாசிச்சவரை உண்மையான அதிமுக தொண்டர்கள் தலைவரா இல்லை, மனிஷனா கூட ஏத்துக்க மாட்டாங்க . நன்றி எற கூறி தனது விளக்கத்தை அளித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

என் வழக்கு, நானே வாதாடுறேன்.. கோர்ட்டில் மாஸ் காட்டிய சவுக்கு.. திமுக எம்பியை வழக்கறிஞராக கேட்டு அதிரடி...

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios