Asianet News TamilAsianet News Tamil

நெல்லையில் கமிஷன் வாங்கி கல்லா கட்டும் மேயர்; சர்ச்சை போஸ்டரால் திமுகவில் சலசலப்பு

திருநெல்வேலி மாநகராட்சியில் மேயர் சரவணனுக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள சர்ச்சை போஸ்டரால் மாவட்ட திமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

controversial poster sticked overall district against dmk mayor in tirunelveli
Author
First Published Jun 15, 2023, 5:46 PM IST

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 51 இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர். இதில் ஒரு தரப்பினர் மேயர் சரவணனுக்கு ஆதரவாகவும், மற்றொரு தரப்பினர் அவருக்கு எதிராகவும் இருந்து வருகின்றனர். இதனால் நெல்லை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படும். 

Mayor Saravan

இதனிடையே நெல்லை மேயரை மாற்றக்கோரி கவுன்சிலர்களில் ஒரு தரப்பினர் அமைச்சர் நேருவை நேரில் சந்தித்து முறையிட்டனர். அமைச்சர் பஞ்சாயத்து நடத்தியதைத் தொடர்ந்து ஓரளவு பிரச்சினை இல்லாமல் இருந்தது. இதனிடையே தற்போது சமூக ஆர்வலர் நம்பிக்குமார் என்பவர் பெயரில் நெல்லை மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், ''தமிழக அரசே தமிழக அரசே, எங்கள் பெரும் நம்பிக்கைக்குரிய முதல்வர் அவர்களே, மாமன்ற உறுப்பினர்களல் மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு கூறியும், 25% கமிஷன் வாங்கி கல்லா நிரப்பத் துடிக்கும் நெல்லை மேயர் மீது உடனடியாக நடவடிக்கை எடு'' என வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தையே எதிர்க்கும் அளவிற்கு செந்தில் பாலாஜி மீது முதல்வருக்கு அப்படியென்ன பாசம்? பாஜக சாடல்

மேலும், ''ஊழலால் முடங்கி கிடக்கும் மக்கள் பணிகளை உடனடியாக தொடங்கிட நடவடிக்கை எடு'' என முதல்வருக்கு கோரிக்கை விடுக்கும் வகையில் அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. செந்தில்பாலாஜி கைது விவகாரத்தால் கடும் அப்செட்டில் உள்ள முதல்வருக்கு நெல்லை போஸ்டர் விவகாரம் இன்னொரு தலைவலியாக பார்க்கப்படுகிறது. இதனிடையே மேயர் சரவணன் ஆதரவு கவுன்சிலர்கள், சர்ச்சைகுரிய இந்த போஸ்டர் குறித்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

கைதுக்கு பயந்து செந்தில் பாலாஜி நெஞ்சுவலி என நாடகமாடுகிறார் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

Follow Us:
Download App:
  • android
  • ios