உச்சநீதிமன்றத்தையே எதிர்க்கும் அளவுக்கு செந்தில் பாலாஜி மீது பாசமா? நாராயணன் திருப்பதி பாய்ச்சல்

உச்சநீதிமன்றத்தையே எதிர்க்கும் அளவிற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது முதல்வர் ஸ்டாலினுக்கு அப்படி என்ன பாசம் என்று பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.

bjp state vice president narayanan thirupathy question about mk stalin's video on senthil balaji arrest issue

பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தி.மு.க.காரர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம். எங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும். இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை! செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல். 10 வருடத்திற்கு முன் உள்ள பழைய புகார். மன ரீதியாக, உடல் ரீதியாக பலவீனப்படுத்தி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருதய நோயை உருவாக்கியிருக்கிறார்கள்" : தி மு க தலைவர் மு.க.ஸ்டாலின்.

கடந்த மே16ம் தேதியன்று, செந்தில் பாலாஜி மீது புதிய விசாரணை செய்து  நடவடிக்கை எடுக்க சொன்னது உச்ச நீதி மன்றம். மேலும், இதில் ஏதாவது தவறு ஏற்படுமேயாயின் உச்சநீதி மன்றமே ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

தமிழ் இலக்கியத்தில் செங்கோல் என்று தான் உள்ளது; மாறாக இஸ்லாம், கிறிஸ்தவம் இல்லை - அண்ணாமலை விளக்கம்

மேலும், அமலாக்கத்துறை தன் விசாரணையை தொடரலாம் என்றும், அரசுப் பணியில் இருப்பவர்கள் மீது சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்த குற்றச்சாட்டு எப்போது பொது வெளியில் வந்து விட்டதோ அது குறித்து முதல் தகவல் அறிக்கையை பதிய வேண்டியது அமலாக்கத்துறையின் கடமையாகும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அடிக்கல் நாட்டிய 15 மாதங்களில் திறப்புவிழா; மதுரை எய்ம்ஸ் மூலம் மத்திய அரசை சாடிய முதல்வர்

யாரை எதிர்க்கிறார் திரு ஸ்டாலின் அவர்கள்? உச்சநீதி மன்றத்தையா? யாருக்கு எச்சரிக்கை விடுக்கிறார் திரு.ஸ்டாலின் அவர்கள்? உச்சநீதி மன்றத்திற்கா? இருதய நோயை எப்படி ஒரே நாளில் உருவாக்க முடியும்? 10 வருடத்திற்கு முன் உள்ள புகார் மீது நடவடிக்கை எடுக்க சொன்னது  உச்சநீதி மன்றம் என்று தெரிந்தும் அநியாயமான தொல்லை கொடுக்கப்படுகிறது என்றெல்லாம் திரு. ஸ்டாலின் அவர்கள் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது..

உச்சநீதி மன்றத்தையே எச்சரிக்கும் அளவிற்கு அப்படியென்ன செந்தில் பாலாஜி மீது பாசம்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios