ஆளுநர் பதவி கிடைத்தது எப்படி.? டுவிட்டரில் கடுமையாக மோதிக்கொள்ளும் தமிழிசை- சு.வெங்கடேசன்

ஆளுநர் பதவி தொடர்பாக எழுந்த சர்ச்சையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கும் இடையில் டுவிட்டரில் கடுமையாக கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. 

Conflict of opinion between Member of Parliament Su Venkatesan and Tamilisai Soundra Rajan regarding the post of Governor

திறமையை மக்கள் அடையாளம் காணவில்லை

கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்  மக்கள் திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். ஆளுனர்களை  ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், மாநில தலைவர்களின் திறமையை ஜனாதிபதி அடையாளம் கண்டு கொள்கிறார்கள். தமிழக மக்கள் அந்த தலைவர்களின் திறமையை அடையாளம் காணவில்லையென தெரிவித்தார். தமிழக மக்களால் எங்களை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்க முடியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கியிருந்தால் எங்களை அமைச்சர் ஆக்கி இருப்பார்கள். தமிழக மக்கள் நல்லவர்களை தயவு செய்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள். 

மதுரைக்கு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் என்னை சந்திக்க உள்ளாரா..? மு.க அழகிரி கூறிய பரபரப்பு தகவல்

Conflict of opinion between Member of Parliament Su Venkatesan and Tamilisai Soundra Rajan regarding the post of Governor

பெயில் ஆனவர்களுக்கு பிரதமர் பாஸ் போடுகிறார்

எங்களைப் போன்றவர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள் என தெரிவித்தார்.  இதற்கு பதில் அளித்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன், ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே. பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

 

அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல

இதற்கு பதில் அளிக்கும் வகையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று வெங்கடேசன் சொல்கிறார்.... டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல...அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம் தான்... டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள்- தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல.... தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது... ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம்... அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில் பெருமையே....

 

இறுமாப்பு வேண்டாம்

நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம்... நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம்... இறுமாப்பு வேண்டாம்...ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும்... அதைப்போன்ற தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை... மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்.... என கூறியுள்ளார்.இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேஷன், நீங்கள் மக்களை கேவலப்படுத்தியதால் அந்த கேள்வி வந்தது தமிழிசை அவர்களே. நான் டுடோரியலை  கேவலமாக சொல்லவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

 

தரம் இறங்கி பேசியுள்ளீர்கள்

மக்கள் பெயில் ஆக்கினாலும் பிரதமர் பாஸ் போட்டு நாங்கள் ராஜ் பவனில் உட்கார்ந்து விடுவோம் என்பதே இறுமாப்பு. அதுவே கேள்வி. கேள்வியை விட்டு விட்டு வேறு ஏதாவது பதில் பேசினால் கூட பரவாயில்லை. எந்த தரத்திற்கு இறங்கி பேசியிள்ளீர்கள்? இது தான் ராஜ்பவன் பட்டறையில் பெற்ற பயிற்சியா தமிழிசை அவர்களே! என சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ரத்தா? குவியும் பணம் பட்டுவாடா புகார்; தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை.?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios