நன்றி என்பது வார்த்தையாக இல்லாமல் முதல்வரின் திட்டங்கள் மூலம் மக்களுக்கு நன்றி சொல்வோம். அதிமுகவின் கோட்டை கோவை என மக்கள் ஒருபோதும் சொல்லவில்லை. இனி கோவை முதல்வர் ஸ்டாலின் கோட்டை தான்.

விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பு பழைய நடைமுறைப்படியே வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதில், பதிவான வாக்குகள் கடந்த 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், கோவையில் உள்ள 100 வார்டுகளில் 73 வார்டுகளில் திமுகவும், காங்கிரஸ் 9 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர். அதிமுக, மதிமுக தலா 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ., ம.ம.க. தலா ஒரு இடங்களிலும் கொ.ம.தே.க. 2 இடங்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றன.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் மாமன்ற, நகர்மன்ற மற்றும் பேரூராட்சி உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கோவையில் கடந்த ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகள் சரிசெய்யப்படும். விசாரணைக்கு பின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகராட்சிக்கு ரூ.200 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

நன்றி என்பது வார்த்தையாக இல்லாமல் முதல்வரின் திட்டங்கள் மூலம் மக்களுக்கு நன்றி சொல்வோம். அதிமுகவின் கோட்டை கோவை என மக்கள் ஒருபோதும் சொல்லவில்லை. இனி கோவை முதல்வர் ஸ்டாலின் கோட்டை தான். முதல்வர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையால் நகர்ப்புற தேர்தலில் வெற்றி. வெளிப்படைத் தன்மையுடன் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.