பெரியார், ஸ்டாலினை அவதூறாக விமர்சித்த பாஜக பெண் ஆதரவாளர்.! விசாரிக்க போலீஸ்க்கு அனுமதி அளித்த கோவை நீதிமன்றம்
திமுக தலைவர் கருணாநிதி குறித்தும், திமுக குறித்தும் டிவிட்டரில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்பட்ட உமா கார்க்கியை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறையினருக்கு கோவை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அவதூறு கருத்து- பாஜக ஆதரவாளர் கைது
கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். 56 வயதான இவர், டிவிட்டர் சமூக வலைதளத்தில் உமா கார்க்கி26 என்ற பெயரில் கருத்து பதிவிட்டு வருகிறார். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பெரியார், கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் குறித்தும் தொடர்ந்து அவதூறாக கருத்துகளை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாகவும், திமுக தலைவர்களை தொடர்ந்து அவதூறு செய்யும் விதமாகவும் கருத்துகளை பதிவு செய்து வருவதாக திமுக ஐடி விங் நிர்வாகிகள் கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்திருந்தனர்.
அதிர்ச்சியில் பாஜக
இந்த புகாரின் அடிப்படையில் உமா கார்த்திகேயனை சைபர் கிரைம் போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர். உமா கார்க்கியை கைது செய்வதற்கு முதல் நாள் பாஜக சார்பாக நடைபெற்ற நிகழ்வில் மாநில தலைவர் அண்ணாமலை உமா கார்கிக்கு சிறந்த செயல்பாட்டாளர் என்ற விருது வழங்கி கவுரவித்திருந்தார். இதனையடுத்து உமா கார்க்கி கைது செய்யப்பட்ட சம்பவம் பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உமா கார்த்திகேயனன் மீது அமைதியை சீர்குலைக்க முயலுதல், இரு பிரிவுகளிடையே மோதலை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஒரு நாள் அனுமதி அளித்த நீதிமன்றம்
இதனையடுத்து கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட உமா கார்த்திக்கை ஜூலை நான்காம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்பொழுது உமா கார்த்திகேயனை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் 2 நாட்கள் அனுமதி கேட்ட நிலையில், இன்று மாலை 5 மணி வரை அனுமதி அளித்து சைபர் கிரைம் காவல்துறையினருக்கு கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையும் படியுங்கள்