திமுக - பாஜக கூட்டணி ..? அப்படி நடக்க வாய்ப்பில்லை.. நெற்றியடி கொடுத்த ஸ்டாலின்.. என்ன சொன்னார் தெரியுமா..?

பிரதமர் மோடி சென்னை வருகைக்கு பிறகு தமிழகத்தில் திமுக, பாஜக கூட்டணி அமையலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் கொள்கை ரீதியிலான திமுக கூட்டணி என்றும் தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

CM Stalin Speech in Manorama News Conclave

கேரள மாநிலம்‌, திருச்சூரில்‌ மலையாள மனோரமா நியூஸ்‌ சார்பில்‌ நடைபெற்ற “இந்தியா - 75” என்ற தலைப்பிலான கருத்தரங்கில்‌ முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,” இது தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி.  எங்களது கூட்டணி ஆரோக்கியமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இது தொடரும்‌ என்று முதலமைச்சர் தெரிவித்தார். பிரதமர் சென்னை வருகைக்கு பிறகு தமிழகத்தில் திமுக, பாஜக கூட்டணி அமையலாம் என்று பேசப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சர் அதற்கு பதிலளிக்கும் விதத்தில் இதனை தெரிவித்தார்.

மேலும் படிக்க:மோடி ஹாப்பியோ ஹாப்பி.. ஸ்டாலின் காட்டிய செம்ம நெருக்கம்... விமானம் ஏறும் போது கொடுத்தாரு பாருங்க ஒரு பரிசு..!!

ஆளுநர்களைக் கொண்டு மாநிலங்களில் பக்கவாட்டில் ஓர் அரசு நடத்த மத்திய அரசு முயல்கிறது. இத்தனை சவால்களுக்கும் இடையே தான் நாம் ஆட்சி செய்ய வேண்டி உள்ளது. சில மோசமான சக்திகள் நம்மை ஆட்கொள்ள நாம் இடம் கொடுக்கக் கூடாது என்று மாநில சுயாட்சி குறித்து பேசினார்.தொடர்ந்து பேசிய அவர், இந்தியா என்பது பல்வேறு மொழிகள்‌ பேசக்கூடிய மக்கள்‌ வாழக்கூடிய நாடாகும்‌. ஒற்றை மொழி என்பது தேசிய மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ, அரசு மொழியாகவோ நிச்சயம்‌ ஆக முடியாது. அப்படி ஆனால்‌ மற்ற மொழிகள்‌ பாதிக்கப்படும்‌. காலப்போக்கில்‌ அழிந்துவிடும்‌ என்று தெரிவித்தார். 

மேலும் படிக்க:பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் என்ன பேசப்பட்டது? விளக்குகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!!

போராடி பெற்ற சுதந்திரத்திற்கு பின்னர்‌ உருவாக்கப்பட்ட அரசியல்‌ அமைப்பு வழங்கிய உரிமைகள்‌ அனைத்தையும்‌ பறிப்பது என்பது மிகமிக தவறானது. இந்திய விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செய்யக்கூடிய துரோகம்‌ என்பது தான்‌ என்னுடைய கருத்து என்று கூறினார்.மேலும் மாநில நிதி ஆதாரத்தின் சுதந்திரத்தை ஜிஎஸ்டி பறித்துள்ளது. மாநிலங்களுக்கு ஜிஎஸ்டியை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றாலும் கூட அவை உரிய நேரத்தில் மாநிலங்களுக்கு வந்து சேர்வது இல்லை. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக்கனியாகி உள்ளது. நீட் ஒரு மக்கள் விரோத கொள்கை" என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் படிக்க:எடப்பாடி தரப்புக்கே தேர்தல் ஆணையம் அழைப்பு.. அதிர்ச்சியில் ஓபிஎஸ்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios