Asianet News TamilAsianet News Tamil

CM STALIN: பிரதமர் மோடியின் தமிழகம் விசிட்… உ.பி.க்களுக்கு ஸ்டாலின் போட்ட உத்தரவு…?

பிரதமர் மோடி தமிழகம் வருகையின் போது திமுகவினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் சில கண்டிஷன்களை கட்சியினருக்கு பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

CM Stalin condition to DMK cadres
Author
Chennai, First Published Dec 22, 2021, 8:19 AM IST

சென்னை: பிரதமர் மோடி தமிழகம் வருகையின் போது திமுகவினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின் சில கண்டிஷன்களை கட்சியினருக்கு பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

CM Stalin condition to DMK cadres

பாஜக தலைமையில் இருந்து யார் வந்தாலும் கொந்தளிக்காத தமிழக மக்கள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பொங்கி எதிர்ப்பை தெரிவிக்கும். தமிழகம் வருகை பற்றிய அறிவிப்பு வெளியான நிமிடத்தில் இருந்தே மோடி எதிர்ப்பு என்கிற நடவடிக்கைகள் வேகம் எடுக்கும்.

கருப்பு பலூன்கள் பறக்க விடுவது, எதிர்ப்பு பிரச்சாரங்கள், மறியல் என பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகம் ஒட்டுமொத்த எதிர்த்து முழக்கமிடும். #gobackmodi என்ற இணைய உலக பிரச்சாரம் வேகம் எடுக்கும். இது கடந்த காலங்களில் நடந்தவை.

CM Stalin condition to DMK cadres

இப்போது தமிழகத்தில் ஜனவரி 12ம் தேதி புதிய மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். கிட்டத்தட்ட 11 மருத்துவக் கல்லூரிகளை அவர் திறந்து வைக்கிறார். தமிழகத்தில் 10 ஆண்டுகள் கழித்து திமுக அரியணையில் அமர்ந்த பின்னர், பிரதமர் மோடி தமிழகம் வரும் முதல் பயணமாகும்.

ஆகையால் மோடியின் பயணம் எப்படி இருக்கும்? என்ற எதிர்பார்ப்புகள் அனைத்து தரப்பினருடமும் எழுந்துள்ளது. குறிப்பாக, ஒன்றிய அரசு எதிர்ப்பு என்ற ஒற்றை முழக்கத்தை திமுக விடாமல் கெட்டியாய் பிடித்துக் கொண்டிருப்பது தான் அதற்கு காரணம்.

CM Stalin condition to DMK cadres

மத்திய அரசுடனான மோதல் போக்கை திமுக இன்னமும் கைவிடவில்லை. தமிழகத்துக்கான நலத்திட்டங்கள், அதற்கான நிதி ஒதுக்கீடு என பல தளங்களில் மத்திய அரசுக்கு எதிராக திமுக கடும் மோதல் போக்கை கையாண்டு வருகிறது.

அடுத்த மாதம் அவரது வருகையின் போது #gobackmodi அல்லது #tnwelcomespmmodi என்ற இரண்டு ஹேஷ்டேக்கில் எது முன்னணியில் இருக்கும் என்ற பேச்சுகள் இப்போது பேசு பொருளாகி வருகிறது. ஆனால் இப்போது ஆட்சியில் இருக்கும் இந்த தருணத்தில் பரபரப்பான விவாதமாக மோடியின் தமிழகம் விசிட் இருக்க போகிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

CM Stalin condition to DMK cadres

பிரதமர் மோடியின் தமிழகம் வருகை என்ற நிகழ்வை முன்னிட்டு உடன்பிறப்புகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய கண்டிஷன் போட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமது கட்சியினரோ, கூட்டணி கட்சியினரோ #gobackmodi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி விடக்கூடாது என்பது தானாம் அது.

மத்தியில் பாஜக எதிர்ப்பு என்பதில் கிஞ்சித்தும் மாற்றம் இல்லை என்றாலும், பிரதமர் வருகையின் போது இந்த டிரெண்டிங் கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இப்படி உலாவரும் ஒரு விஷயத்தின் பின்னணியில் உள்ள சில காரணங்களை அடுக்குகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

நிதி நெருக்கடியால் தவிப்பு, நிதி திட்டங்களுக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி என பல விஷயங்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் மத்திய அரசையே தமிழகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

CM Stalin condition to DMK cadres

மத்திய அரசின் ஒத்துழைப்புடன் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டிய திட்டங்கள் சிக்கலாகி விடக்கூடாது என்பது முக்கிய விஷயமாக இருக்கிறது என்று கூறும் அரசியல் விமர்சகர்கள், அதன் வெளிப்பாடு தான் இப்படிப்பட்ட கட்டளை என்றும் விவாதித்து வருகின்றனர்.

மத்திய பாஜக அரசும் தமிழக அரசின் மூவ்மெண்டுகளை நன்றாக அறிந்து வருகிறது என்று கூறும் அவர்கள், இணக்கமே இப்போதைக்கு சரி என்று பேசப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எது எப்படி இருந்தாலும் பிரதமர் மோடியின் தமிழகம் விசிட் என்பது இப்போது இருந்து மிக முக்கியத்துவம் பெற தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை…!!

Follow Us:
Download App:
  • android
  • ios