Asianet News TamilAsianet News Tamil

ராஜூவ் காந்தி கொலை வழக்கு.. மற்ற 6 பேர் விடுதலை சாத்தியமா..? முதலமைச்சர் ஆலோசனை..

ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை தொடர்ந்து சிறையில் இருக்கு நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
 

CM MK Stalin meeting on the release of 6 others in the Rajiv Gandhi assassination case
Author
Tamilnádu, First Published May 21, 2022, 7:40 PM IST

ராஜூவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை தொடர்ந்து சிறையில் இருக்கு நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் மலர் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் இரண்டு நாள் பயணமாக உதகை சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று மலர் கண்காட்சி திறந்த வைத்த முதலமைச்சர், இன்று ”உதகை 200” துவக்க விழா மற்றும்‌ அரசு நலத்திட்ட உதவிகள்‌ வழங்கும்‌ நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். 

மேலும் படிக்க: ”பெரியார் சொன்னார்”.. இது தான் திராவிட மாடல் ஆட்சி.. மார்த்தட்டும் ஸ்டாலின்..

இதன் பின்னர், உதகையில் இன்று காணொளி காட்சி மூலம் சட்ட வல்லுநர்களுடன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் மற்றம் 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தலைமை செயலாளர் இறையன்பு, அரசு தலைமை வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.

முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை கடந்த புதன்கிழமை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அரசமைப்பு சட்டத்தில் 142 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ராஜூவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிசந்திரன் ஆகிய 6 பேரை விடுதலை செய்வது தொடர்பாக இன்று முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

மேலும் படிக்க: வரலாற்றில் முதல்முறையாக!! மே மாதத்தில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.. முதலமைச்சர் உத்தரவு

Follow Us:
Download App:
  • android
  • ios