TVK : முன்கூட்டியே முடிவுக்கு வரும் தவெக ஆட்சி? 2029-ல் நடக்கப்போகும் தேர்தல்?
TVK: தவெக தலைமையிலான அரசு 2031 வரை தொடர வேண்டும். ஆனால், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் 2029-ல் அமலானால், தவெக அரசு 3 ஆண்டுகளிலேயே மீண்டும் தேர்தலை சந்திக்கும் சூழல் உருவாகலாம். இதுகுறித்து விவரமாக காண்போம்.

2029-ல் ஒரே நேரத்தில் தேர்தல்?
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதே ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தின் நோக்கம். இதற்கான அரசியலமைப்புத் திருத்த மசோதாக்கள் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனையில் உள்ளன.
இந்த நிலையில், 2029-ம் ஆண்டிலேயே முதல் கட்டமாக ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 2028-க்குள் தேவையான அரசியலமைப்புத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், 2029 மக்களவைத் தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களையும் நடத்த முடியும் என்று கூட்டுக்குழுத் தலைவர் பி.பி. சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : Acne : முகப்பரு ஏன் வருகிறது? தவிர்க்க என்ன சாப்பிடணும், என்ன செய்யக்கூடாது?
தமிழகத்துக்கு என்ன கணக்கு?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ல் நடைபெற்றது. இயல்பான 5 ஆண்டு பதவிக்காலம் தொடர்ந்தால் அடுத்த தேர்தல் 2031-ல்தான் நடக்க வேண்டும்.
ஆனால், 2029-ல் மக்களவைத் தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்த முடிவு செய்யப்பட்டால், 2026-ல் அமைந்த சட்டப்பேரவையின் பதவிக்காலம் முன்கூட்டியே முடிவுக்கு வரலாம்.
இதனால், 2026-ல் ஆட்சிக்கு வரும் அரசுக்கு முழுமையான 5 ஆண்டுகள் பதவிக்காலம் கிடைக்காமல், சுமார் 3 ஆண்டுகளில் மீண்டும் மக்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம்.
இதையும் படிங்க : Air Fryer : ஏர் ஃபிரையரில் சமைக்கும்போது கேன்சர் அபாயத்தை அதிகரிக்காமல் இருக்க இந்த 7 விஷயங்களை கவனிங்க!
தவெக ஆட்சிக்கு 3 ஆண்டுகள்தானா?
தவெக ஆட்சி 3 ஆண்டுகளில் முடிவடையும் என்பது இப்போதைய நிலையில் உறுதியான தகவல் அல்ல. அரசியலமைப்புத் திருத்தம், நாடாளுமன்ற ஒப்புதல், மாநிலங்களின் நிலைப்பாடு உள்ளிட்ட பல காரணிகள் இதில் உள்ளன.
மேலும், எதிர்க்கட்சிகள் இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, இது கூட்டாட்சி அமைப்புக்கும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, 2029 தேர்தல் என்பது இன்னும் சாத்தியக்கூறு மட்டுமே. ஆனால் அது நடைமுறைக்கு வந்தால், 2026-ல் தொடங்கும் தமிழக ஆட்சிக்கு 2031 வரை முழுமையான 5 ஆண்டுகள் கிடைக்குமா? என்ற கேள்வி மிக முக்கியமானதாக மாறும்.
தவெக ஆட்சியின் ஆயுள் 5 ஆண்டுகளா... அல்லது 3 ஆண்டுகளா? 2029-ல் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ எடுக்கும் முடிவுதான் இதற்கு பதில் சொல்லும்!
இதையும் படிங்க : Saubhagya Yoga : மகாலட்சுமியின் அருளால் உருவாகும் சௌபாக்கிய யோகம்! 4 ராசிகளுக்கு பொன்னும் பொருளும் சேரும்!

