Asianet News TamilAsianet News Tamil

அதுக்கு வாய்பே கிடையாது... மு.க.ஸ்டாலின் கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர்..!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப், புதுச்சேரி, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Citizenship Amendment Act issue...Speaker rejected MK Stalin request
Author
Chennai, First Published Feb 17, 2020, 12:18 PM IST

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கேரளா, பஞ்சாப், புதுச்சேரி, மேற்குவங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

Citizenship Amendment Act issue...Speaker rejected MK Stalin request

இதையும் படிங்க;-  பிழைக்க வந்த நடிகர் ரஜினிகாந்த் வண்ணாரப்பேட்டைக்கு வருவாரா? இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளித்த வேல்முருகன்..!

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், மு.க.ஸ்டாலின் பேசுகையில் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். குடியுரிமை சட்டத்திருத்தத்தால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறி வருகிறது. மேலும், சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைதியாக அறவழியில் நடந்த போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது ஏன்? என கேள்வி எழுப்பினார். 

Citizenship Amendment Act issue...Speaker rejected MK Stalin request

இதற்கு பதிலளித்த சபாநாயகர் தனபால் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பேரவையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்திய நிலையில் சபாநாயகர் பதிலளித்துள்ளார். வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து மட்டும் சட்டப்பேரவையில் பேசலாம் என சபாநாயகர் தெரிவித்தார். மேலும், சட்டப்பேரவை விதிகளை சுட்டிக் காட்டிய சபாநாயகர் தனபால், சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios