இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என கூறிய ரஜினிகாந்த் வண்ணாரப்பேட்டைக்கு வருவாரா? என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.  

சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவத்தைக் கண்டித்து, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற்ற போராட்டத்தில் வேல்முருகன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த அரசின் முதலமைச்சராக இருக்கும் வரை சி.ஏ.ஏ, என்ஆர்சி, என்பிஆர் அமல்படுத்த மாட்டேன் என அறிவித்ததை போன்று தமிழக முதல்வர் எடப்பாடியும் அறிவிக்காவிட்டால் தங்களது ஜனநாயக வழியிலான போராட்டம் தொடரும் என்றார். 

பாட்ஷாவாக நடத்த போதாது ரஜினி, இஸ்லாமியர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் கூறிய ரஜினிகாந்த் வண்ணாரப்பேட்டையிலலும், திருவாரூரிலும் என்னுடைய தாய்கள் அழைக்கிறார்கள். உண்மையிலேயே நீங்கள் இஸ்லாமியம், இஸ்லாமிய மக்களையும் மதித்தால் இது சார்ப்பின்மை நாடா அண்ணன், தம்பிகளாக, மாமன் மச்சன்களாக விட்டுகொடுக்கின்ற வாழ்க்கை முறை நீடிக்க வேண்டும் என்று பிழைக்க வந்த நடிகர் ரஜினிகாந்த் நினைத்தால் வண்ணாரப்பேட்டைக்கு வாருங்கள் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த போராட்டத்துக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி முழு ஆதரவு கொடுக்கும். அதற்காக எத்தனை வழக்குகள் போட்டாலும், எத்தனை முறை சிறையில் அடைத்தாலும் கவலைப்பட மாட்டோம் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.