விபத்தில் சிக்கியவருக்கு ஓடி வந்து உதவிய முதல்வர் ஸ்டாலின்.. அண்ணா சாலையில் நம்ம CM செய்த தரமான சம்பவம்..

தலைமைச் செயலகத்தில் இருந்து அண்ணாசாலை வழியாக சென்றுகொண்டிருந்த போது டிஎம்எஸ் அருகே விபத்தை கண்ட முதலமைச்சர் கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கி சென்று காயமடைந்தவரை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது

Chief Minister Stalin who ran to help the accident victim.. People praised.

தலைமைச் செயலகத்தில் இருந்து அண்ணாசாலை வழியாக சென்றுகொண்டிருந்த போது டிஎம்எஸ் அருகே விபத்தை கண்ட முதலமைச்சர் கான்வாய் வாகனத்தை நிறுத்தி இறங்கி சென்று காயமடைந்தவரை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: தமிழக மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு.. கொந்தளித்த ராமதாஸ்... 25 லட்சம் கேட்டு அறிக்கை.

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில்  இருந்து அண்ணாசாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு விபத்து ஏற்பட்டு இருந்தது,  அதில் சூளைமேட்டில் சேர்ந்த அருள் ராஜ் என்பவர் பலத்த காயத்துடன் சாலையில் விழுந்து கிடந்தார். அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது, அப்போது அந்த வழியாக வந்த முதலமைச்சர் ஸ்டாலின் இதை பார்த்துவிட்டார். உடனே தனது கான்வாய் வாகனத்தை நிறுத்துமாறு முதல்வர் கூறினார்.

Chief Minister Stalin who ran to help the accident victim.. People praised.

அதை அடுத்து வேகமாக தனது காரில் இருந்து இறங்கி ஓடிச்சென்ற முதலமைச்சர் ரத்தக் காயத்துடன் இந்த நபரை போலீசாரின் உதவியுடன் ஆட்டோவில் ஏற்றினார். அதன்பிறகு அந்த நபர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது அந்த நபருக்கு மருத்துமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. காரில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் வாகனத்தை நிறுத்தி  விபத்துக்கு ஆளானவரை ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்த இந்த செயல் அங்கிருந்தவர்களை  நெகிழ வைத்தது. 

 

இதை அங்கிருந்த ஒரு சிலர் வீடியோ எடுத்து சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர். காயமடைந்தவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உதவும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வருகிறது. பலரும் முதல்வரின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர், இவ்வளவு எளிமையான, இரக்கமான முதல்வர் தமிழகத்துக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பலரும் சமூக வலை தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: மதுரையில் உயிரைக் காவு வாங்கிய பாதாள சாக்கடை பள்ளம்; திரும்ப வருமா போன உயிர்? யார் தவறு இது?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios