இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் சட்டத்திற்கு ஆளுநர் கையெழுத்து போடுவார்? இறக்கி அடிக்கும் மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்த அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்த மோடி, தி.மு.க ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமா என கேட்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Chief Minister Stalin has said that it is mysterious that the Governor has not approved the bill to ban online gambling

'உங்களில் ஒருவன் பதில்கள்'

தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பில் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். 

கேள்வி: தி.மு.க ஆட்சியைக் கலைத்த காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கலாமா என்று கேட்கிறாரே பிரதமர்? 

பதில்: பா.ஜ.க ஆட்சியைக் கவிழ்த்த அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருக்கிறவர் இதைக் கேட்கலாமா?

கேள்வி: அதானி குழுமத்திற்கு எதிராக வந்துள்ள அறிக்கை பற்றி கூட்டுக்குழு விவாதத்திற்கோ ஒன்றிய அரசு தயாராக இல்லாமல் இருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பா.ஜ.க அரசின் மீதான நேரடியான குற்றச்சாட்டுகளாக இருக்கிறது.உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வே சீரியஸாக விசாரிக்கிறது. எனவே, இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.அதேபோல், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட வேண்டும். சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகள். ஆணித்தரமானவை. இதை பற்றி ஒரு வார்த்தை கூட பிரதமர் பதிலளிக்காதது அதிர்ச்சியாக இருக்கிறது.

நீண்ட நாட்களாக தூக்கத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலினை எழுப்புங்கள்.! தமிழக சட்ட ஒழுங்கை காட்டுங்கள்- குஷ்பூ

Chief Minister Stalin has said that it is mysterious that the Governor has not approved the bill to ban online gambling


பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம்

கேள்வி: ராகுல்காந்தி, கார்கே போன்றவர்களது பேச்சுகளை நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கிறார்களே?

பதில்: இது நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளுக்கு எதிரான செயல்.அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதால் மக்களின் மனங்களில் இருந்து நீக்கிவிட முடியாது.

கேள்வி: 'அமலாக்கத்துறைதான் எதிர்க்கட்சிகளை இணைத்திருக்கிறது என்று பிரதமர் பேசியிருப்பது ஆரோக்கியமான அரசியலா?

பதில்: அமலாக்கத்துறை எதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கான பிரதமரின் ஒப்புதல் வாக்குமூலம் இது. எதிர்க்கட்சிகளைப் பழி வாங்குகிறேன் என்று நாடாளுமன்றத்தில் முதல் முறையாக ஒரு பிரதமரே ஒப்புக் கொண்டிருக்கிறார். இது நாட்டுக்கும் நல்லது இல்லை. தன்னாட்சி அமைப்புகளுக்கும் நல்லது இல்லை. ஜனநாயகத்துக்கும் நல்லது இல்லை.

மக்கள் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு.. எய்ம்ஸ் ஸ்டார்ட் பண்ணுங்க - எச்சரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Chief Minister Stalin has said that it is mysterious that the Governor has not approved the bill to ban online gambling

ஆன்லைன் சூதாட்டம்- தற்கொலைகள்

கேள்வி: ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்கிறது. ஆனால் அதற்கான தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்காமல் ஆளுநரின் பிடிவாதமும் தொடர்கிறதே?

 பதில்: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் சிக்கி மீள முடியாமல் தற்கொலை செய்துகொள்பவர்களைப் பற்றிய செய்திகள் தினந்தோறும் நாளிதழ்களில் வருகிறது. தன்னுடைய மகன் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக வேலை பார்த்த கம்பெனியில் பணத்தைக் கையாடல் செய்திருக்கிறான் என்று தெரிந்து அவனது அம்மா தற்கொலையே செய்து கொண்டார். சென்னை வியாசர்பாடியில்தான் இது நடந்திருக்கிறது. மகன் தலைமறைவாகிட்டான். இது ஒரு சம்பவம். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த ரியாஸ் கான் என்பவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்திருக்கிறார். காவிரி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இது இரண்டாவது சம்பவம்.

மக்கள் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு.. எய்ம்ஸ் ஸ்டார்ட் பண்ணுங்க - எச்சரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Chief Minister Stalin has said that it is mysterious that the Governor has not approved the bill to ban online gambling

இன்னும் எத்தனை உயிர் பலியாவது

சேலம் மாவட்டம் ஆத்தூர் உடையார்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பிரபு, தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது மூன்றாவது சம்பவம். மதுரையில் குணசீலன் என்கிற கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இவை அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்குள் நடந்தவை. இவை எல்லாம் தமிழ்நாடு ஆளுநருக்குத் தெரியவில்லையா? இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் அவர் கையெழுத்து போடுவார்? இவ்வாறு ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம், அதன்படி உரிய சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய சட்டமன்றத்தை அவமதிக்கிறார் ஆளுநர்.

Chief Minister Stalin has said that it is mysterious that the Governor has not approved the bill to ban online gambling

ஆளுநரின் செயல் மர்மமாக உள்ளது

அமைச்சரவை அனுப்பிய அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், அதே சட்டத்தைச் சட்டமன்றம் மூலமாக நிறைவேற்றி அனுப்பினால் 3 மாதமாக ஒப்புதல் வழங்காமல் இருப்பதுதான் மர்மமாக இருக்கிறது.இதில் என்ன கொடுமை என்றால் ஆன்லைன் விளையாட்டுகளில் வெல்லக் கூடிய தொகைக்கு வரி போடுவதுதான். ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இது இருக்கிறது. ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்யாமல் அதை அங்கீகரிக்கிற வகையில் வரி போடுகிற இவர்களை என்ன சொல்வது?  என முதலமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

சென்னையின் இந்த முக்கிய சாலையில் 2 வருடத்திற்கு போக முடியாது..! மெட்ரோ பணிக்காக ரூட்டை மாற்றி விட்ட காவல் துறை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios