மக்கள் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு.. எய்ம்ஸ் ஸ்டார்ட் பண்ணுங்க - எச்சரித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
செங்கல்லை பற்றி அனைவரும் பேச ஆரம்பித்துள்ளார்கள். ஒன்றிய அரசுக்கு வைக்கின்ற ஒரே கோரிக்கை மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
வருடந்தோறும் ஐ.ஏ.எஸ்,ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட், இறகுப்பந்து, கால்பந்து போட்டிகள் தமிழக அரசு சார்பில் நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.
போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை வளாக மைதானத்தில் இந்த ஆண்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான கிரிக்கெட் போட்டியை நாணயம் சுண்டி விட்டு தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க..பட்டினி சாவு ஒரு பக்கம்.. கோடிக்கணக்கில் புரளும் ஈரோடு தேர்தல் ஒரு பக்கம் - அரசியல் கட்சிகளின் சாதனை இதுவா.?
பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ‘கடந்த ஒன்றரை மாதங்களாக விளையாட்டு அரங்குகளுக்கு சென்று நேரில் சந்தித்து கோரிக்கைகளை கேட்டு வருகிறேன். அதிகாரிகளுடன் கலந்து பேசி முதல்வரிடம் கோரிக்கையாக வைத்துள்ளோம். முதல்வரின் அறிவுறுத்தலின்படி நல்ல அறிவிப்புகள் வரும். ஒடிசா மாநிலத்திற்கு சென்று விளையாட்டு மைதானங்களை பார்வையிட்டு முதல்வரிடம் கூறியுள்ளோம்.
இங்கும் நல்ல கட்டமைப்பு உள்ளது, விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில் அறிவிப்புகள் அறிவிக்கப்படும். தேர்தலில் செங்கல்லை கையில் வைத்து சுற்றி வந்தேன். செங்கல்லை பற்றி அனைவரும் பேச ஆரம்பித்துள்ளார்கள். ஒன்றிய அரசுக்கு வைக்கின்ற ஒரே கோரிக்கை மதுரை மாவட்ட மக்கள் அனைவரும் செங்கல்லை கையில் எடுப்பதற்கு முன்பு வேலையை ஆரம்பிக்க வேண்டும். ஈரோடு தேர்தல் வெற்றி வாய்ப்பு உள்ளது, வாக்கு வித்தியாசம் தான் எனக்கு தெரியவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க..விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா.? சீமான் என்ன சொன்னார் தெரியுமா.!