ஊர்தோறும் வளர்ச்சி.. துறைதோறும் மலர்ச்சி! திராவிட மாடல் ஆட்சி தொய்வின்றி தொடரும் - மு.க.ஸ்டாலின் டுவிட்

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து, இன்று மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Chief minister MK Stalin tweet about 2 years of DMK

2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி புரிந்து வந்த அதிமுக அரசிற்கு முடிவுகட்டி கடந்த 2021-ம் தேர்தலில் வெற்றிவாகை சூடி ஆட்சியைக் கைப்பற்றியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனைக் திமுகவினர் தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். திமுக அரசு வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது : “ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஈராண்டை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது. தினந்தோறும் திட்டங்கள் தீட்டி வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கண்டு வருகிறோம். துறைதோறும் மலர்ச்சியை உருவாக்கி வருகிறோம். திசைதோறும் கவனத்தை ஈர்த்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும்!” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... ஸ்டாலின் தான் வராரு பாடலுக்கு டஃப் கொடுக்கும் வகையில்... 2 ஆண்டு ஆட்சி நிறைவுக்காக வெளியிடப்பட்ட ஸ்பெஷல் பாடல்

அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவின் 2 ஆண்டு ஆட்சி நிறைவு குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், ஓர் இனத்தின் அரசாக இன்று 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி என மாணவர்கள் - மகளிர் - விவசாயிகள் - மாற்றுத்திறனாளிகள் - திருநங்கையர் என எல்லா தரப்புக்குமான நம் திட்டங்கள் இந்திய ஒன்றியத்துக்கே வழிகாட்டுகின்றன. திராவிட மாடல் அரசை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் நம் முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... ஏவிஎம் ஸ்டுடியோவில் புதிய ம்யூசியம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்; கமல், சிவகுமார் பங்கேற்பு

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios