ஏவிஎம் ஸ்டுடியோவில் புதிய ம்யூசியம்… முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்; கமல், சிவகுமார் பங்கேற்பு
முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ள ஏவிஎம் அருங்காட்சியகத்தில் ஆரம்பகால சினிமாவில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சென்னை வடபழனியில் ஏவிஎம் ஸ்டூடியோவில் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்தியாவின் பழம்பெரும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏவிஎம் ஸ்டூடியோ. தற்போது ஏவிஎம் ஸ்டூடியோவின் ஒரு பகுதியில் சினிமா அருங்காட்சியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்துள்ளார்.
ஏவிஎம் ஸ்டூடியோஸ் 1945ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்திருக்கிறது. ஆனால், அண்மைக் காலமாக ஏவிஎம் நிறுவனம் திரைப்படத் தயாரிப்பில் இருந்து விலகி இருக்கிறது. அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழ்ராக்கர்ஸ்’ என்ற வெப் சீரீஸ் தான் கடைசியாக ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது.
இந்த ஆட்சி திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் தான்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
வடபழனியில் அமைந்துள்ள ஏவிஎம் ஸ்டுடியோ சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வந்தது. இப்போது அது புதுப்பிக்கப்பட்டு, திருமண மண்டபமாகவும், குடியிருப்புகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. ஸ்டூடியோவின் 3வது அரங்கில், ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தை ஏவிஎம் நிர்வாகம் உருவாக்கியுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் ஆரம்பகால சினிமாவில் பயன்படுத்தப்பட்ட அரிய பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அரிய கேமராக்கள், பழங்கால கார்கள், சினிமா உபகரணங்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இங்கு இடம்பெற்றுள்ளன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அருங்காட்சியகத்தைத் இன்று திறந்து வைப்பதை முன்னிட்டு ஏ.வி.எம்.சரவணன், அவரது மகன் குகன் உள்ளிட்டோருடன் நடிகர்கள் கமல்ஹாசன், சிவகுமார் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டனர்.
ஈபிஎஸ் மீது 3 பிரிவுகளில் வழக்கு! சொத்து மதிப்பை குறைத்துக் கூறியது தொடர்பான வழக்கில் நடவடிக்கை
முன்னதாக ஏப்ரல் 29ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள ஏவிஎம்.சரவணன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். ஏவிஎம் சரவணன் குடும்பத்தினரை முதல்வர் சந்தித்து பற்றி ஏவிஎம் நிறுவனம் தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், "பாரம்பரியம் மாறாமல் தலைவர் கலைஞர் வழி எங்கள் இல்லம் வந்து பரிவுடன் உடல் நலம் விசாரித்து சென்ற மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் குடும்பத்தினர் சார்பில் மனமார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்." என்று கூறியுள்ளது.
கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து துறைகளில் தமிழ்நாடு முன்னேறியது எப்படி?