ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்திருந்தால் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டிருக்காது - சீமான் கருத்து
தமிழகத்தில் ஆட்சியாளர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை மறைப்பதாகக் கூறிய ஆளுநரின் கருத்தை ஏற்கிறேன், ஆனால் அதை குறிப்பிட உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என சீமான் விமர்சனம்.
காளையார் கோவிலில் மருதுபாண்டியரின் 222வது குருபூஜை விழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆளுநர் அரசியல் பேசியதாலும், தினமும் அவதூறு குண்டை வீசியதாலும் வெறுப்பாகி போனவர்கள் குண்டை வீசி இருக்கலாம். ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இது போன்ற பிரச்சனை உருவாகியிருக்காது.
வரலாற்றில் தமிழ் போராட்ட வீரர்களை மறைக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அந்த குற்றச்சாட்டை கூற உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? நீங்கள் தான் எங்களது வரலாற்றை சிதைத்தது என்றார். மேலும் ஆர்எஸ்எஸ்ன் கோட்பாடுகளை மத்திய அரசு அப்படியே செயல்படுத்தி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு நக்கலாக சிரித்த அண்ணாமலை அவரை பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி இருந்தால் ரசித்திருப்பார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சாதிவாரி கணக்கெடுப்பு, நீட்டுக்கு எதிராக கையெழுத்து போன்றவை ஒருபோதும் பயன் தராது. ஓட்டுக்கு பணம் கொடுக்க வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கணக்கெடுக்க முடியும் போது சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாதா? அரசு உயரதிகாரிகள் தமிழ் எழுத்தில் பிழை விடுவது சில இடங்களில் மட்டுமல்ல. நாடெங்கும் அப்படித்தான் உள்ளது என்றார்.