தொழிலதிபரை திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா தகாத வார்த்தையில் திட்டியதோடு அவரது கை, கால்களை உடைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலதிபரை திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா தகாத வார்த்தையில் திட்டியதோடு அவரது கை, கால்களை உடைத்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் எஸ்.ஆர்.ராஜா. இவர் கடந்த 2006 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் தாம்பரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2021 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர் தாம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படிங்க: ஐயோ என் தலையில் இடி விழுந்துவிட்டது.. முராத் புகாரி உயிரிழந்தார் (புகாரி ஓட்டல் உரிமையாளர்).. கதறும் வைகோ..

மேலும் தாம்பரம் தொகுதி முதன் முதலில் தொடங்கப்பட்ட போது, இவர் திமுக தாம்பரம் மாநகர செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், எஸ்.ஆர்.ராஜா சிங்கப்பெருமாள் கோயில் அடுத்துள்ள மால்ரோசா புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு சென்றுள்ளார். அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் அவர் திடீரென மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஊழியர்களை அவர் தகாத வார்த்தையில் பேசியதோடு, கை கால்களை உடைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். அவர் செய்த அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானது.

இதையும் படிங்க: அதையே ஏன் சொல்றீங்க.. திருமாவளவனுக்கு தெரியாதா? ஆ. ராசாவுக்கு பதிலடி கொடுத்த பாஜக நிர்மல்குமார்!

இதுத்தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஃப்ட் முதலமைச்சர் என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாஃப்ட். தவறு செய்வோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ இத்தகைய செயலில் ஈடுபட்டதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்களும் நெட்டிசன்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.