Asianet News TamilAsianet News Tamil

திடீர் மாரடைப்பால் பாத்ரூமில் மயங்கி விழுந்து உயிரிழந்த அமைச்சர்... பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!

நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற உமேஷ் கட்டி பெங்களூரு டாலர்ஸ் காலனி வீட்டுக்கு இரவு வந்தார். இரவு உணவுக்குப் பின் கழிப்பறைக்குக் சென்ற அவர் நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதவை தட்டிப் பார்த்தார். ஆனால், எந்த ஒரு பதிலும் வரவில்லை. 

cardiac arrest.. Karnataka Minister Umesh Katti passes away
Author
First Published Sep 7, 2022, 6:37 AM IST

கர்நாடக வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி (61) மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் அக்கட்சியின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பாஜக தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்து வருகிறார். இவரது அமைச்சரவையில் வனத்துறை மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக  உமேஷ் கட்டி பதவி வகித்தார்.

நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற உமேஷ் கட்டி பெங்களூரு டாலர்ஸ் காலனி வீட்டுக்கு இரவு வந்தார். இரவு உணவுக்குப் பின் கழிப்பறைக்குக் சென்ற அவர் நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கதவை தட்டிப் பார்த்தார். ஆனால், எந்த ஒரு பதிலும் வரவில்லை. இதனையடுத்து, கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது உமேஷ் கட்டி மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதையும் படிங்க;- திராவிட மாடலே... எங்கள் பஞ்சமி நிலம் எங்கே.. ராமதாஸ் பாணியில் ஸ்டாலினை தெறிக்கவிடும் ஆம்ஸ்ட்ராங்.

cardiac arrest.. Karnataka Minister Umesh Katti passes away

உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இவரது திடீர் இறப்பு செய்தி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cardiac arrest.. Karnataka Minister Umesh Katti passes away

இவரது உடலுக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினர். அரசு மரியாதையுடன் உமேஷ் கட்டி உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும். பெலகாவி மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- உச்சநீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வரும்.. எடப்பாடி அரசியல் அனாதை ஆவார்.. சொல்வது யார் பாருங்க..

Follow Us:
Download App:
  • android
  • ios