Asianet News TamilAsianet News Tamil

திமுக, காங்கிரஸ் வேஷம் போடுகிறார்கள்.. சமூக நீதி காத்தவர் யார் தெரியுமா ? அண்ணாமலை ஆவேசம்

Annamalai : ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக, சமூக நீதி என்றெல்லாம், திமுக திருமாவளவன், காங்கிரஸ் கட்சிகள் போடும் கோஷம், நிஜமான வேஷம்’ என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

Bjp state president annamalai statement about president election 2022
Author
First Published Jun 24, 2022, 3:22 PM IST

அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய வரலாற்றில் முதன்முறையாக, ஒடிசா மாநிலத்தின் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை, பாஜக ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட தகுதியுள்ள வேட்பாளரை தேர்வு செய்ய இயலாமல், நேற்று வரை பாஜகவில் இருந்த யஷ்வந்த் சின்ஹாவை தான் வேட்பாளராக அறிவிக்க வேண்டிய அவல நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

Bjp state president annamalai statement about president election 2022

வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்று இதுவரை பேசிய, திமுக திருமாவளவன், காங்கிரஸ் கட்சியினர் யாரை ஆதரிக்க போகின்றனர் ? இந்தியாவில், 10 கோடி பேருக்கும் மேல் பழங்குடி இனத்தவர் இருந்த போதிலும், அவர்களில் ஒருவர் கூட இதுவரை ஜனாதிபதி ஆனதில்லை. ஒரு பழங்குடியின வேட்பாளரை ஜனாதிபதி ஆக்குவதை எதிர்ப்பவர்களாக, சமூக நீதியின் காப்பாளர்கள் இருப்பர். 

இதையும் படிங்க : AIADMK GC Meeting Live Updates: ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு.. வாகனம் பஞ்சர்.!

திமுக - காங்கிரஸ் கூட்டணி

திமுகவும், காங்கிரசும் சமூகத்தில் அடித்தட்டில் இருந்து மேலே வந்தால் கூட, ஒரு குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றால் மட்டுமே ஆதரவு தரும். மற்றவர்கள் எப்போதும் போல தாத்தா காலத்தில் இருந்து வழி வழியாக போஸ்டர் ஒட்டுவதற்கும், 'அடுத்த தலைவர் வாழ்க' என கோஷம் போடவும், அடிமட்ட வேலை செய்ய மட்டுமே அனுமதி தரப்படும்.'கிறிஸ்துவரை முன்னிறுத்தினால் தான் ஆதரிப்பேன்' என்ற திருமாவளவனின் நிலை மாறி விட்டதா ?

இதன் வாயிலாக, தமிழகத்தில் இருப்பது சமூக நீதியா, சந்தர்ப்பவாதமா என்பதை மக்கள் புரிந்து கொள்ளலாம். திமுக எப்போதுமே தமிழுக்கும், தாழ்நிலை மக்களுக்கும், சிறுபான்மை இனத்துக்கும் எதிராக தான் செயல்படும். தமிழ், தமிழ் என்பது பேச்சளவில்நின்று விடும். சிறுபான்மை இனத்தவரான, தமிழரான அப்துல் கலாமுக்கு ஓட்டு போடாமல் லஷ்மி சேஹலுக்கு ஓட்டு போட்ட கட்சி. 

Bjp state president annamalai statement about president election 2022

பிரதமர் மோடி

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக, சமூக நீதி என்றெல்லாம், திமுக திருமாவளவன், காங்கிரஸ் கட்சிகள் போடும் கோஷம், நிஜமான வேஷம். ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண்மணியை, இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்பில் அமர்த்த முன்வந்த பிரதமர் மோடியையும், பாஜகவின் அனைத்து தலைவர்களையும் வணங்கி மகிழ்கிறேன். உண்மையான சமூக நீதி காத்த உத்தமராக, மகளிருக்கு மாண்பு சேர்த்த மனிதருள் மாணிக்கமாக பிரதமர் மோடி குன்றின் மேல் இட்ட விளக்காக ஒளி வீசுகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : AIADMK : புரட்சி பயணம் ஆரம்பம்.! ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா..நம்ம லிஸ்ட்லயே இல்லையே ?

இதையும் படிங்க : Kodanad case : மீண்டும் சூடுபிடித்த கொடநாடு வழக்கு.. சிக்கலில் இபிஎஸ்.. அடுத்து என்ன ?

Follow Us:
Download App:
  • android
  • ios