comscore

AIADMK GC Meeting Live Updates: ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு.. வாகனம் பஞ்சர்.!

AIADMK General Committee meets

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் கடந்த 10 நாட்களாக சூறாவளியாக சுழன்றடித்த நிலையில், அதை இறுதி செய்யும் கிளைமாக்ஸ் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இரட்டைத் தலைமையை வலியுறுத்தும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இல்லாமல் போகவே, கடைசி வாய்ப்பாக பொதுக்குழுவை நடத்தவிடாமல் முஸ்தீபுகளை மேற்கொண்டார். 

1:05 PM IST

மாலை அணிவித்த தொண்டர்.. தட்டிவிட்ட இபிஎஸ்

எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவிக்க முயன்ற போது இருங்கங்கப்பா... இருங்கங்க...என்னங்க போங்க....சும்மா என கோபடைந்தார். இதனால் அணிவிக்க வந்த மாலையை இபிஎஸ் ஆதரவாளர்கள் மாலையை அணிவிக்காமல் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க;- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சால் பரபரப்பு..!

12:59 PM IST

ஓ.பன்னீர்செல்வத்தின் பரப்புரை வாகனத்தை பஞ்சர் செய்த இபிஎஸ் ஆதரவாளர்

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்த பரப்புரை வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

12:55 PM IST

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்.. கே.பி.முனுசாமி

ஜூலை 11ம் தேததி நடக்கவிருக்கும் அடுத்தத பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

12:27 PM IST

கட்சி அழிப்பாதைக்கு செல்கிறது.. புதிய பொதுக்குழு தேதி அறிவிப்பு செல்லாது... வைத்தியலிங்கம்

ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது செல்லாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். அதிமுகவை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்வதாக வைத்தியலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க;- ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்கள்..! நிராகரித்த பொதுக்குழு- அதிர்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஆதரவாளர்கள்

12:20 PM IST

ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு

சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட வெளியேறிய போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

12:15 PM IST

பொதுக்குழுவை புறக்கணித்து ஓபிஎஸ் வெளிநடப்பு

சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட வைத்திலிங்கம், அதனை தொடர்ந்து  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.

12:12 PM IST

ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம்

ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். 

12:10 PM IST

இரட்டை தலைமையை ரத்து செய்துவிட்டு ஒற்றை தலைமை வேண்டும்.. சி.வி.சண்முகம்

ஆளும் திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை அதிமுகவின் இரட்டை தலைமையில் எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இரட்டை தலைமையை ரத்து  செய்துவிட்டு ஒற்றை தலைமை தொடர்பாக விவாதிக்க வேண்டும். இந்த பொதுக்குழுவிலேயே அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியையும் அறிவிக்க வேண்டும் என அவைத் தலைவருக்கு சி.வி.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

12:00 PM IST

அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்வு

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன்  உசேன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

11:54 AM IST

அதிமுக வரலாற்றில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது இதுவே முதல்முறை

அதிமுக வரலாற்றில் பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

11:50 AM IST

அனைத்து தீர்மானங்களும் அதிமுக பொதுக்குழுவில் நிராகரிப்பு

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கொண்டு வந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக கே.பி.முனுசாமி தெரிவிதத்துள்ளார். பொதுக்குழுவின் ஒட்டுமொத்த கோரிக்கையும் ஒற்றைத் தலைமை மட்டுமே என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

11:41 AM IST

ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ மலர் கொத்து வரவேற்ற அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன்

 ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக உறுப்பினர்கள் கோஷமிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ மலர் கொத்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வரவேற்றார்.

11:36 AM IST

பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து மட்டுமே விவாதம்?

உயர்நீதிமன்றம் புதிய தீர்மானங்களை கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்ட நிலையில் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாது என்றும் ஒற்றைத் தலைமை குறித்தத விவாதம் மட்டுமே நடைபெறும் என கூறப்படுகிறது.

11:32 AM IST

பவுன்சர்கள் பாதுகாப்பில் எடப்பாடியார்.. பொதுக்குழு அரங்கிற்குள் உற்சாக வரவேற்பு

பொதுக்குழு அரங்கிற்குள் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர். சுமார் 100 பவுன்சர்கள் பாதுகாப்பு வளையத்தில் எடப்பாடியார் உள்ளார். போலீசார் மற்றும் பவுன்சர்கள் புடைசூழ பொதுக்குழு அரங்கிற்குள் இபிஎஸ் நுழைந்தார்.

இதையும் படிங்க;- பொதுக் குழுவில் இருந்து வெளியே செல்லுங்கள்..! அரங்கிற்கு வந்த ஓபிஎஸ்க்கு எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்கள்

11:16 AM IST

ஓபிஎஸ்க்கு எதிர்ப்பு.. அமைதி காக்க சொன்ன வளர்மதி

பொதுக்குழுவில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்களை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கோரிக்கை வைத்தார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வளர்மதி பேசினார்.

இதையும் படிங்க;- பொதுக் குழுவில் இருந்து வெளியே செல்லுங்கள்..! அரங்கிற்கு வந்த ஓபிஎஸ்க்கு எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்கள்

11:04 AM IST

அதிமுகவின் ‘வாரிசு’ இ.பி.எஸ் என கோஷம்

பொதுக்குழு நடக்கும் அரங்கில் அதிமுகவின் வாரிசு, பொதுச்செயலாளர் ஒற்றை தலைமை எடப்பாடி என இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி வருகின்றனர். 

இதையும் படிங்க;- நீதிமன்ற உத்தரவால் இரவில் ஓபிஎஸ்ஸுக்கு விடியல்.. இபிஎஸ்ஸுக்கு தள்ளிப்போகும் ஒற்றைத் தலைமை பட்டாபிஷேகம்..?

10:59 AM IST

ஓபிஎஸ்-ஐ கண்டுகொள்ளாத முன்னாள் அமைச்சர்கள்

அதிமுக பொதுக்குழுவுக்கு வந்த பன்னீர்செல்வத்தைத வாயிலில் அமர்ந்திருந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், 
கே.பி.முனுசாமி வரவேற்கவில்லை.

10:56 AM IST

வைத்தியலிங்கத்தை எதிர்த்து குரல்கள் எழுந்ததால், மேடையில் இருந்து இறங்கினார்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பொதுக்குழுவிற்கு வந்த போது அவருக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து வைத்தியலிங்கத்தை எதிர்த்து குரல்கள் எழுந்ததால், மேடையில் இருந்து இறங்கினார்.

10:50 AM IST

விண்ணை முட்டும் ஒற்றை தலைமை கோஷம்... பொதுக்குழுவில் ஓபிஎஸ்.க்கு எதிர்ப்பு

பொதுக்குழு நடைபெறும் அரங்கிற்குள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்த உடன் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். ஓபிஎஸ் கூட்ட அரங்கிற்குள் நுழைந்த போது பெரும்பாலான தொண்டர்கள் எழுந்து நின்று வரவேற்பு தரவில்லை. மேலும், ஓபிஎஸ் அரங்கிற்குள் வந்த போது வேண்டும் வேண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து முழமிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க;- திரைப்பட கிளைமாக்ஸ் காட்சியை மிஞ்சிய அதிமுக பொதுக்குழு வழக்கின் நீதிமன்ற விசாரணை...! திக் திக் நிமிடங்கள்

10:44 AM IST

இபிஸ்-ஐ முந்தி முதலில் அரங்கிற்கு வந்த ஓபிஎஸ்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி முதலில் புறப்பட்டார். ஆனால், அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார். அவரது பின்னால், கிளம்பிய ஓபிஎஸ்  மாற்று வழியில் வந்து முதல் ஆளாக மண்டபத்திற்குள் நுழைந்தார். 

இதையும் படிங்க;- நீதிபதிகள் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என்ன சொன்னார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

9:55 AM IST

அதிமுக பொதுக்குழுவில் போலி பாஸ்?

அதிமுக பொதுக்குழுவில் போலி பாஸ்களுடன் பலர் வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2,500 பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சிலர் போலி பாஸ்களுடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

9:07 AM IST

அதிமுக பொதுக்குழு... விஐபிகள் அனுமதி கிடையாது

அதிமுக தலைமை ஏற்கனவே விஐபிகள் அனுமதி கிடையாது என்று அறிவித்த நிலையில்  இன்று  நடைபெறும் பொதுக்குழுவிற்கு முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்பிக்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை அழைப்பிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் மண்டபத்திற்குள் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க;- நீதிபதிகள் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என்ன சொன்னார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

இதையும் படிங்க;- OPS vs EPS : நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.!ஆனால் ஒற்றை தலைமை விவகாரத்தில் மாற்றம் இல்லை-ஜெயக்குமார் அதிரடி

9:03 AM IST

மஞ்சள் வேட்டி, வெள்ளை சட்டையில் ஓபிஎஸ்

சென்னை இல்லத்தில் நடந்த கோமாதா பூஜையில் மஞ்சள் வேட்டி, வெள்ளை சட்டையில் ஓபிஎஸ் பங்கேற்றார். இதனையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இல்லத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்து வருகின்றனர். 

9:00 AM IST

வானகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

அதிமுக பொதுக்குழு நடக்க உள்ள நிலையில் மதுரவாயல், வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் போக்குவரத்து நெரிசலால் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

8:50 AM IST

பொதுக்குழுவுக்கு புறப்பட்டார் இபிஎஸ்.. மலர்த்தூவி ஆரவாரம் செய்யும் தொண்டர்கள்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாகனம் மீது மலர்தூவி வரவேற்கின்றனர். 

இதையும் படிங்க;- மஞ்சள் வேட்டி, வெள்ளை சட்டையில் பரப்புரை வாகனத்தில் புறப்பட்ட ஓபிஎஸ்.. தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு

8:24 AM IST

நீதிமன்ற தீர்ப்பினால் எந்தவித பின்னடைவும் இல்லை.. ஆர்.பி.உதயகுமார்

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல் 100% கடைபிடிக்கப்படும்.  நீதிமன்ற தீர்ப்பினால் எந்தவித பின்னடைவும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

7:59 AM IST

எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை

பொதுக்குழு கூட்டத்திற்கு செல்ல இல்லத்திலிருந்து புறப்பட்டவுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படவுள்ளது.

7:55 AM IST

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம். அதிமுகவிற்கு பின்னடைவு என்பதே கிடையாது. எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

7:51 AM IST

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்களுக்கு தீ வைப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

7:50 AM IST

மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி.. ஓபிஎஸ்-ன் மகன் ரவீந்திரநாத்

சென்னை உயர்நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது. அவர்கள் நீதிபதிகளாக இருந்தாலும், அதில் ஒருவர் எம்.ஜி.ஆர், இன்னொருவர் ஜெயலலிதா. இந்தத்தீர்ப்பு அதிமுக தொண்டர்களுக்கு எழுச்சி மிகுந்த தீர்ப்பாக இருக்கிறது.

1:05 PM IST:

எடப்பாடி பழனிசாமிக்கு மாலை அணிவிக்க முயன்ற போது இருங்கங்கப்பா... இருங்கங்க...என்னங்க போங்க....சும்மா என கோபடைந்தார். இதனால் அணிவிக்க வந்த மாலையை இபிஎஸ் ஆதரவாளர்கள் மாலையை அணிவிக்காமல் கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க;- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சால் பரபரப்பு..!

12:59 PM IST:

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்த பரப்புரை வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

12:55 PM IST:

ஜூலை 11ம் தேததி நடக்கவிருக்கும் அடுத்தத பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

12:28 PM IST:

ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருப்பது செல்லாது என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறியுள்ளார். அதிமுகவை அழிவுப்பாதைக்கு சதிகாரர்கள் கொண்டு செல்வதாக வைத்தியலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க;- ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்கள்..! நிராகரித்த பொதுக்குழு- அதிர்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஆதரவாளர்கள்

12:20 PM IST:

சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட வெளியேறிய போது ஓ.பன்னீர்செல்வம் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

12:15 PM IST:

சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக மேடையில் கோஷமிட்ட வைத்திலிங்கம், அதனை தொடர்ந்து  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.

12:12 PM IST:

ஜூலை 11ம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். 

12:10 PM IST:

ஆளும் திமுக அரசின் மக்கள் விரோத போக்குகளை அதிமுகவின் இரட்டை தலைமையில் எதிர்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இரட்டை தலைமையை ரத்து  செய்துவிட்டு ஒற்றை தலைமை தொடர்பாக விவாதிக்க வேண்டும். இந்த பொதுக்குழுவிலேயே அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியையும் அறிவிக்க வேண்டும் என அவைத் தலைவருக்கு சி.வி.சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

12:00 PM IST:

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன்  உசேன் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

11:54 AM IST:

அதிமுக வரலாற்றில் பொதுக்குழுவில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

11:50 AM IST:

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கொண்டு வந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக கே.பி.முனுசாமி தெரிவிதத்துள்ளார். பொதுக்குழுவின் ஒட்டுமொத்த கோரிக்கையும் ஒற்றைத் தலைமை மட்டுமே என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

11:41 AM IST:

 ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக உறுப்பினர்கள் கோஷமிடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ், இபிஎஸ்-ஐ மலர் கொத்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வரவேற்றார்.

11:36 AM IST:

உயர்நீதிமன்றம் புதிய தீர்மானங்களை கொண்டு வரக்கூடாது என உத்தரவிட்ட நிலையில் எந்த தீர்மானமும் கொண்டு வரப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாது என்றும் ஒற்றைத் தலைமை குறித்தத விவாதம் மட்டுமே நடைபெறும் என கூறப்படுகிறது.

11:32 AM IST:

பொதுக்குழு அரங்கிற்குள் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர். சுமார் 100 பவுன்சர்கள் பாதுகாப்பு வளையத்தில் எடப்பாடியார் உள்ளார். போலீசார் மற்றும் பவுன்சர்கள் புடைசூழ பொதுக்குழு அரங்கிற்குள் இபிஎஸ் நுழைந்தார்.

இதையும் படிங்க;- பொதுக் குழுவில் இருந்து வெளியே செல்லுங்கள்..! அரங்கிற்கு வந்த ஓபிஎஸ்க்கு எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்கள்

11:19 AM IST:

பொதுக்குழுவில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்களை அனைவரும் அமைதி காக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வளர்மதி கோரிக்கை வைத்தார். ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வளர்மதி பேசினார்.

இதையும் படிங்க;- பொதுக் குழுவில் இருந்து வெளியே செல்லுங்கள்..! அரங்கிற்கு வந்த ஓபிஎஸ்க்கு எதிர்ப்புத் தெரிவித்த உறுப்பினர்கள்

11:04 AM IST:

பொதுக்குழு நடக்கும் அரங்கில் அதிமுகவின் வாரிசு, பொதுச்செயலாளர் ஒற்றை தலைமை எடப்பாடி என இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பி வருகின்றனர். 

இதையும் படிங்க;- நீதிமன்ற உத்தரவால் இரவில் ஓபிஎஸ்ஸுக்கு விடியல்.. இபிஎஸ்ஸுக்கு தள்ளிப்போகும் ஒற்றைத் தலைமை பட்டாபிஷேகம்..?

10:59 AM IST:

அதிமுக பொதுக்குழுவுக்கு வந்த பன்னீர்செல்வத்தைத வாயிலில் அமர்ந்திருந்த எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், 
கே.பி.முனுசாமி வரவேற்கவில்லை.

10:56 AM IST:

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பொதுக்குழுவிற்கு வந்த போது அவருக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். தொடர்ந்து வைத்தியலிங்கத்தை எதிர்த்து குரல்கள் எழுந்ததால், மேடையில் இருந்து இறங்கினார்.

10:50 AM IST:

பொதுக்குழு நடைபெறும் அரங்கிற்குள் ஓ.பன்னீர்செல்வம் நுழைந்த உடன் ஒற்றைத் தலைமை வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர். ஓபிஎஸ் கூட்ட அரங்கிற்குள் நுழைந்த போது பெரும்பாலான தொண்டர்கள் எழுந்து நின்று வரவேற்பு தரவில்லை. மேலும், ஓபிஎஸ் அரங்கிற்குள் வந்த போது வேண்டும் வேண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என இபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து முழமிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க;- திரைப்பட கிளைமாக்ஸ் காட்சியை மிஞ்சிய அதிமுக பொதுக்குழு வழக்கின் நீதிமன்ற விசாரணை...! திக் திக் நிமிடங்கள்

10:44 AM IST:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி முதலில் புறப்பட்டார். ஆனால், அவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டார். அவரது பின்னால், கிளம்பிய ஓபிஎஸ்  மாற்று வழியில் வந்து முதல் ஆளாக மண்டபத்திற்குள் நுழைந்தார். 

இதையும் படிங்க;- நீதிபதிகள் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என்ன சொன்னார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

9:55 AM IST:

அதிமுக பொதுக்குழுவில் போலி பாஸ்களுடன் பலர் வந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2,500 பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சிலர் போலி பாஸ்களுடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது. போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

10:34 AM IST:

அதிமுக தலைமை ஏற்கனவே விஐபிகள் அனுமதி கிடையாது என்று அறிவித்த நிலையில்  இன்று  நடைபெறும் பொதுக்குழுவிற்கு முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் எம்பிக்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அடையாள அட்டை அழைப்பிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் மண்டபத்திற்குள் அமர வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க;- நீதிபதிகள் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என்ன சொன்னார் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க.!

இதையும் படிங்க;- OPS vs EPS : நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்.!ஆனால் ஒற்றை தலைமை விவகாரத்தில் மாற்றம் இல்லை-ஜெயக்குமார் அதிரடி

9:03 AM IST:

சென்னை இல்லத்தில் நடந்த கோமாதா பூஜையில் மஞ்சள் வேட்டி, வெள்ளை சட்டையில் ஓபிஎஸ் பங்கேற்றார். இதனையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இல்லத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்து வருகின்றனர். 

9:00 AM IST:

அதிமுக பொதுக்குழு நடக்க உள்ள நிலையில் மதுரவாயல், வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் போக்குவரத்து நெரிசலால் கடும் பாதிப்படைந்துள்ளனர்.

10:33 AM IST:

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே அதிமுக பொதுக்குழு இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். அவருக்கு வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு வாகனம் மீது மலர்தூவி வரவேற்கின்றனர். 

இதையும் படிங்க;- மஞ்சள் வேட்டி, வெள்ளை சட்டையில் பரப்புரை வாகனத்தில் புறப்பட்ட ஓபிஎஸ்.. தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு

8:24 AM IST:

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல் 100% கடைபிடிக்கப்படும்.  நீதிமன்ற தீர்ப்பினால் எந்தவித பின்னடைவும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

7:59 AM IST:

பொதுக்குழு கூட்டத்திற்கு செல்ல இல்லத்திலிருந்து புறப்பட்டவுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படவுள்ளது.

7:55 AM IST:

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்புக்கு மதிப்பளிக்கிறோம். அதிமுகவிற்கு பின்னடைவு என்பதே கிடையாது. எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

7:51 AM IST:

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

7:50 AM IST: