திமுகவிற்கு செக் வைக்கும் அண்ணாமலை...! ஊழல் பட்டியலோடு தமிழக ஆளுநரோடு திடீர் சந்திப்பு
தமிழக அமைச்சர்கள் மீதான புகார் மற்றும் பாஸ்போர்ட் முறைகேடு தொடர்பாக தமிழக ஆளுநர் ரவியோடு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்கவுள்ளார்.
திமுக- பாஜக மோதல்
திமுக-பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் அமர்ந்துள்ள 14 மாதங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி வருகிறார். மின் வாரியத்தில் டெண்டர் வழங்கியதில் முறேகேடு நடைபெற்றதாகவும், முதலமைச்சர் துபாய் பயணம் குடும்ப சுற்றுலாவாக இருந்தாக தெரிவித்து இருந்தார். இதே போல கர்ப்பினி பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குவதில் ஆவினுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டதாகவும் புகார் கூறியிருந்தார். இதற்க்கு திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது 630 கோடி ரூபாய்க்கு மான நஷ்ட ஈடு வழக்கை திமுக தொடர்ந்துள்ளது. மேலும் அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களிடம் இருந்து பாஜகவினர் பணம் பெற்றதாகவும் திமுக புகார் கூறியிருந்தது. இந்தநிலையில் திமுக அமைச்சர்கள் முறைகேடு தொடர்பாக புகார்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த புகாரை தமிழக ஆளுநரிடம் வழங்க இருப்பதாக அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
கைக்கு வந்த கட்சி அலுவலகம்.. கேப் விடாமல் அடித்து நொறுக்கும் இபிஎஸ்.. தொடரும் ஓபிஎஸின் சறுக்கல்.!
ஆளுநரை சந்திக்கும் அண்ணாமலை
மதுரை அவனியாபுரம் பகுதியில் 65பேருக்கு போலியான பாஸ்போட் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், விமான அதிகாரி ஒருவரின் பெயரில் பல பாஸ்போட் பெறப்பட்டுள்ளது எனவும் அண்ணாமலை குற்றம்சாட்டியிருந்தார். இந்த முறைகேடு தொடர்பாக தமிழக ஆளுநரிடம் தகவல்களை கொடுக்க உள்ளதாக அண்ணாமலை கூறியிருந்தார். பாஸ்போர்ட் முறைகேடு விவகாரம் நாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விஷயம் எனக்கூறியவர்,ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஸ்போர்ட் முறைகேடு தொடர்பாக எந்த நடவடிக்கையும் டுக்க வில்லை என குற்றம்சாட்டினார். எந்த ஆட்சியில் இந்த ஊழல் நடைபெற்று இருந்தாலும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அண்ணாமலை கேட்டுக்கொண்டிருந்தார். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் திமுக அமைச்சர்களின் முறைகேடுகள் தொடர்பாக புகார்களையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மின் வாரியத்தில் தவறான நிறுவனத்திற்கு மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டெண்டர் வழங்கியதாக புகார் கூறி தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்