ஓபிஎஸ்-இபிஎஸ் நேர்க்கு நேர் சந்திப்பு..??? டெல்லியில் தடபுடலாக நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் சந்திக்க வாய்ப்பு
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாளை எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லவுள்ளார். அங்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திக்க இருப்பதாக தவகல் வெளியாகியுள்ளது.
டெல்லிக்கு செல்லும் ஓபிஎஸ்-இபிஎஸ்..?
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என இரு பிரிவாக அதிமுக பிளவுப்பட்டுள்ளது. இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அதே போல இபிஎஸ் தரப்பு சார்பாக தம்பிதுரை பங்கேற்றார். இந்தநிலையில் குடியரசு தலைவர் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இன்று மதியத்திற்குள் குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி யாருக்கு என தெரிந்து விடும். எனவே நாளை மறுதினம் டெல்லியில் குடியரசு தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த்திற்கு வழியனுப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்ற அதிமுக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐ. நா. சபைக்கே போங்க.. அப்பவும் நாங்கதான் ஜெயிப்போம்.. ஓபிஎஸ் தரப்பை ஜெர்க் ஆக்கும் ஜெயக்குமார்.!
பதவியேற்பு நிகழ்ச்சியில் ஓபிஎஸ்-இபிஎஸ்
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியா விடை நிகழ்ச்சி நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. மேலும் வருகிற 25 ஆம் தேதி புதிய குடியரசு தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. எனவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே நாளை சென்னையில் இருந்து டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். அதிமுகவின் இரட்டை தலைமையாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்ற பிறகு நாளை டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வுகளின் போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இபிஎஸ் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் தமிழக மக்களின் கோரிக்கைகளை மனுவாக எடப்பாடி பழனிசாமி வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்வுகளின் போது அதிமுக உட்கட்சி பிரச்சனை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஓபிஎஸ்-இபிஎஸ் இரண்டு பிளவாக அதிமுக பிரிந்து இருப்பது நாடாளுமன்ற தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என கூற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
கைக்கு வந்த கட்சி அலுவலகம்.. கேப் விடாமல் அடித்து நொறுக்கும் இபிஎஸ்.. தொடரும் ஓபிஎஸின் சறுக்கல்.!
வீடு திரும்பும் ஓபிஎஸ்
இந்தநிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஓபிஎஸ் இன்று மாலை சிகிச்சை முடிந்து வீடு திரும்புகிறார். எனவே புதிய குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் கலந்து கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்த போதும் தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழியனுப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புதிய குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவில் ஓபிஎஸ் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் ஓபிஎஸ்- இபிஎஸ் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
அப்பாவை தொடர்ந்து மகனுக்கும் ஆப்பு ரெடி? விடாமல் அடிக்கும் இபிஎஸ்.. மிரளும் ஓபிஎஸ்.!